/* */

உலகின் கவனத்தை ஈர்த்த பிரதமர் மோடியின் பயணம்

பிரதமர் மோடியின் அமெரிக்கா சுற்றுப் பயணம் வெளி நாட்டு பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

HIGHLIGHTS

உலகின் கவனத்தை ஈர்த்த பிரதமர் மோடியின் பயணம்
X

ஜோ பைடனுடன் பிரதமர் மோடி. பின்புறம் நிற்பவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இந்த சுற்றுப்பயணத்தை High Rank Visit அதாவது அதி முக்கியத்துவம் வாய்ந்த பயணம் என்று வெளிநாட்டு அரசியல் மற்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். சமீபத்தில் தென்கொரிய அதிபரும், ஃப்ரெஞ்ச் அதிபர் இம்மானுவல் மாக்ரோனும் அமெரிக்கா சென்றிருந்தார்கள். ஆனால் அமெரிக்க அதிபரும் அமெரிக்க மக்களும் ஒன்றாக மகிழ்வாக எதிர்பார்ப்பது நம் பிரதமரின் வருகையைத் தான்.

அமெரிக்க மக்களும் அமெரிக்க வாழ் இந்திய மக்களும் Indo American மக்களும் ஆயிரக்கணக்கில் இணைந்து நம் பிரதமர் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனும் பங்கு பெறும் பிரம்மாண்டமான ராலி நடைபெறவுள்ளது. (வாஷிங்டன் monument முதல் லிங்கன் மெமோரியல் வரை) இதில் மோடி மோடி மோடி என்ற ஆர்ப்பரிப்புக்கு பஞ்சமிருக்காது. உலகம் முழுவதும் இருந்து வரும் பத்திரிகைகளும் இதை முக்கிய செய்தி ஆக்கி வருகின்றனர். பெரிய அளவிலான வர்த்தக மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்பது மட்டுமல்ல.... இந்தியா ஐந்தாவதாக சூப்பர் Exclusive Club இல் அங்கமாகும். இதுவரை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா மட்டும் உள்ள இந்த சூப்பர் exclusive Club இல் இனி இந்தியாவும் சேரப்போகிறது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக Washington Post பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள தொலைதொடர்பு மீடியாக்கள் பிரதமரின் இந்த அமெரிக்க பயணத்தை முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிடுகின்றன. இந்த High Rank Visit இன் முக்கியமான மீட்டிங் எல்லாமே White House இல் தான் நடக்க இருக்கின்றன. இது மட்டுமல்லாமல் இன்னும் ஏழெட்டு இடங்களுக்கும் மோடி ஜி செல்லவிருக்கிறார். அங்கெல்லாம் அவருடன் ஜோ பைடனும் அவரது குடும்பமும் செல்கிறார்கள். குடும்பமாக பிரதமருக்கு விருந்தும் கொடுக்கிறார்கள். பாரத நாட்டிடமும் பாரத பிரதமருக்கும் அவர்கள் கொடுக்கும் பாசமும் மரியாதையும் அங்கே மிளிரப் போகிறது.

இந்தியா - சீனா மற்றும் அமெரிக்கா - சீனா இடையேயான பிரச்னைகளும் பேச்சுவார்த்தையில் இடம் பெறும் என்றும் இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று அங்குள்ள பத்திரிகைகள் விவரம் தெரிவிக்கின்றன.WION என்ற மீடியாவில் இது தொடர்பாக பல விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புத் துறையில் 7 முக்கிய ஒப்பந்தங்கள். 2500 spy Drones, Domestic Jets, வாங்குவதற்கான ஒப்பந்தங்கள், முக்கியமாக இவை எல்லாம் Make in India மூலமாக தயாரித்து விற்பனைக்கு வழங்குவதன் மூலம் அமெரிக்கா ஒரு சுமூகமான ஆரோக்யமான உறவை ஏற்ப்படுத்தப்போகிறது. இரு நாடுகளுக்கும் இது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வாகவே இருக்கப் போகிறது.

எந்த ஒரு நாட்டுக்கும் கொடுக்கப்படாத முக்கியத்துவத்தை அமெரிக்கா இந்தியாவுக்கு கொடுக்கிறது என்றால் இதெல்லாம் யாரால் சாத்தியமாயிற்று?? மோடி என்ற தனி மனிதரால். அவரது உலகளாவிய பார்வையால்.

அமெரிக்கா போன்ற வளர்ந்த பெரியண்ணன் மனோபாவத்தில் இருக்கும் நாட்டின் ஆதரவுடன் உலக அரங்கில் ஒரு முதன்மையான இடத்தை பாரத புண்ணியபூமி அடையப்போகிறது.விசா இல்லை என்று மறுத்து ஏளனப்படுத்திய நாட்டில் இன்று ஒரு ராஜாவைப் போல் வலம் வருகிறார் பிரதமர் மோடி. காலம் இன்னும் பல சிறப்புகளை இவர் மூலம் நம் நாட்டிற்கு கொடுக்கப் போகிறது என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமில்லை.

Updated On: 22 Jun 2023 1:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு