/* */

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு நடத்தி அவரை கொல்ல முயற்சித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு
X
இம்ரான்கான்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சி நடந்தது.

Ex-Prime Minister of Pakistan Imran Khan shotநமது அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டில் அவ்வப்போது ராணுவப் புரட்சி நடப்பது உண்டு. ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக ராணுவம் புரட்சி செய்து அதன் அதிபர்களை கைது செய்து சிறையில் அடைத்த சம்பவங்களும் உண்டு. அதே போல் பதவியில் இருப்பவர்களை குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு மூலம் தாக்குதல் நடத்திய சம்பவங்களும் பல நடந்து உள்ளன. பிரதமராக இருந்த பெனாசிர் பூடாடோ சுட்டுக் கொல்லப்பட்டார். இதே போல அங்கு அரசியல் வன்முறை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

Ex-Prime Minister of Pakistan Imran Khan shotஇந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து உலகம் முழுவதும் பிரபலமானவராக இருந்த இம்ரான் கான் பின்னர் அரசியலில் குதித்து அந்நாட்டின் பிரதமர் ஆனார். ஆனால் பிரதமர் பதவியில் அவர் நீண்ட காலம் இருக்க முடியவில்லை. ஊழல் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக நடந்த போராட்டங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரச்சினைகள் காரணமாக அந்நாட்டின் உச்சநீதிமன்றம் அவரை பதவியில் இருந்து விலகுமாறு உத்தரவிட்டது.

Ex-Prime Minister of Pakistan Imran Khan shotஇதன் காரணமாக இம்ரான் கான் பதவி விலக நேரிட்டது. ஆனாலும் அவர் அரசியலில் இருந்து விலகவில்லை இந்நிலையில் இன்று அவரை அவரது அரசியல் எதிரிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சித்து உள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் வசீராபாத்தில் இன்று பாகிஸ்தான் அரசுக்கு எதிராக இம்ரான் கான் கட்சியினர் ஒரு பேரணி நடத்தினார்கள். இந்த பேரணியில் பங்கேற்று விட்டு காரில் ஏற முயன்ற இம்ரான் கானை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள். இதில் அவருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது .மேலும் அவரது பாதுகாவலர்கள் உட்பட எட்டு பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் பாகிஸ்தானில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இம்ரான் கான் ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ex-Prime Minister of Pakistan Imran Khan shotதுப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த இம்ரான் கான் உடனடியாக லாகூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது காலில் இருந்த குண்டுகள் அகற்றப்பட்டதாகவும், முதல் கட்ட சிகிச்சைக்கு பின்னர் அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது. அதே நேரத்தில் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த அவரது கட்சியினருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் பரவி வருகிறது.

Updated On: 4 Nov 2022 4:59 AM GMT

Related News