/* */

ஒரே நேர்க்கோட்டில் 5 கோள்கள்... 18 ஆண்டுக்கு பிறகு வானில் அதிசய நிகழ்வு...!

NASA Tamil -ஒரே நேர்க்கோட்டில் 5 கோள்கள் 18 ஆண்டுகளுக்கு பின்னர், வானில் தோன்றும் அதிசய நிகழ்வு இம்மாதம் ஜூன் 27 ம் தேதி வரை நடைபெறுகிறது என நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஒரே நேர்க்கோட்டில் 5 கோள்கள்... 18 ஆண்டுக்கு பிறகு வானில் அதிசய நிகழ்வு...!
X

அமெரிக்காவில் உள்ள நாசா ஆய்வு  மையம்.

NASA Tamil - சூரியக்குடும்பத்தின் எட்டு கோள்களும் தங்களுக்கு உரிய வட்டப்பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன. நாம் வாழும் பூமி, சூரியனை ஒருமுறை முழுவதுமாக சுற்றி முடிக்க 365 நாட்கள் ஆகிறது. இதே போல பிற கோள்கள் சூரியனை சுற்றிமுடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் வேறுபடும்.

அப்படி கோள்கள் சூரியனை சுற்றிவரும்போது, சில சமயங்களில் ஒரே நேர்க்கோட்டில் வரும் அதிசயமும் வானில் நிகழும். அந்த வகையில், இப்போது புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுக்கிறது.

இந்த அதிசய நிகழ்வை வரும் 27 ஆம் தேதி வரையில் காணலாம். அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாகவும், பின்பாகவும் சூரியனுக்கு மேலே வளைவாக அணிவகுத்து இருக்கும் இந்த ஐந்து கோள்களையும் வெறும் கண்களில் நாம் காண முடியும் என்று நாசா ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சுமார் 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் இதுபோன்று அதிசய நிகழ்வு தோன்றுகிறது எனவும், கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் இதுபோன்ற நிகழ்வு வானில் தோன்றிய நிலையில், இனி இதுபோன்ற நிகழ்வு 2040 ஆம் ஆண்டு தான் தோன்றும் எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 25 Jun 2022 9:54 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  2. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  3. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  4. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  5. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  6. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  7. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!
  8. ஆன்மீகம்
    ஆறுமுகனின் அருள்மொழிகள்: ஆன்மிகத்தின் ஊற்றுக்கண்
  9. வீடியோ
    🔴LIVE : T20 World Cup squad ROHIT SHARMA press meet |...
  10. லைஃப்ஸ்டைல்
    நியாயமான எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படக் கூடாது..!