/* */

விரைவில் தொடங்கவுள்ள முட்டுக்காடு மிதவை உணவகம்

முட்டுக்காடு மிதவை உணவகத்தின் அனைத்து பணிகளும் இன்னும் 15 நாட்களில், முழுமையாக முடிக்கப்படும் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

HIGHLIGHTS

விரைவில் தொடங்கவுள்ள முட்டுக்காடு மிதவை உணவகம்
X

முட்டுக்காடு மிதக்கும் உணவகம் - மாதிரி படம் 

சென்னை அருகே திருப்போரூர் ஒன்றியம், கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடில் நீர் விளையாட்டு மையமாக படகு குழாம் உள்ளது. இது, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தால் இயக்கப்படுகிறது.

இதில், விசைப்படகுகள், துடுப்பு படகுகள், வேக படகுகள் என, 30க்கும் மேற்பட்ட படகுகள் உள்ளன. வார விடுமுறை, கோடை விடுமுறை நாளில், இங்கு பொழுது போக்குவதற்காக ஏராளமானோர் வருகின்றனர்.

மேலும், சுற்றுலா பயணியர் வருகையை அதிகரிக்கும் நோக்கில், படகு குழாமில், 5 கோடி ரூபாய் மதிப்பில், 125 அடி நீளம், 25 அடி அகலத்தில், இரண்டு அடுக்கு மிதவை உணவக கப்பல் தயாரிக்கப்படுகிறது.

ஏரியின் அழகை ரசித்தவாறே உணவருந்தக்கூடிய வகையில் தமிழ்நாட்டில் முதன் முறையாக மிதவை உணவகம் முட்டுக்காட்டில் அமைய உள்ளது. இந்த மிதவை உணவகம் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். ஒரு படகு தயார் செய்யப்பட்டு அந்தப் படகில் உணவகம் ஏற்படுத்தப்படும். முட்டுக்காடு ஏரியில் பயணித்தவாறு அந்த உணவகத்தில் அமர்ந்து சுற்றுலா பயணிகள் உணவருந்தலாம்.

இதில், தரை தளம் முழுதும் குளிர்சாதன வசதியும், முதல்தளம் திறந்த வெளியாகவும், சமையலறை, சேமிப்பு அறை, கழிப்பறை மற்றும் இயந்திர அறையுடன் கப்பல் வடிவமைக்கப்படுகிறது.

இந்த கப்பல், தமிழகசுற்றுலா வளர்ச்சிக்கழகம், கொச்சியைச் சேர்ந்த 'கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் சார்பில், தனியார் மற்றும் பொது பங்களிப்பு மூலம் உருவாகிறது.

கடந்த ஆறு மாதங்களாக, இதற்கான கட்டுமானப்பணிகள் படகு குழாம் வளாகத்தில் நடைபெற்று வருகின்றன. இதுவரை 75 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன.

இன்னும் 15 நாட்களில், அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்படும் என, சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மிதவை உணவகத்தின் சிறப்பம்சங்கள்:

• 125 அடி நீளம் 25 அடி அகலத்தில் 2 அடுக்குகளை கொண்டிருக்கும்.

• இந்த படகில் சமையலறை, கழிவறை வசதிகள் உண்டு

• தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதி.

• ஏரியில் நீரின் அளவு குறைவாக இருந்தால் கூட மிதக்கும்.

Updated On: 23 Jan 2024 1:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?