/* */

சவுதி அரேபியாவில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

சவுதி அரேபியாவில் இன்று (ஆகஸ்ட் 1) முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சவுதி அரேபியாவில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
X

சவுதி அரேபியா

சவுதி அரேபியாவில் ஆகஸ்ட் 1 முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வரும் நாடுகளில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சவுதி அரேபியாவில் பல மாதங்களுக்குப் பிறகு, சுற்றுலா பயணிகளுக்கு இன்று (ஆகஸ்ட்01 ) முதல் அனுமதி வழங்கப்படுகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 17 மாதங்களுக்கும் மேலாக சவுதி அரேபியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் மீண்டும் சுற்றுலாவை தீவிரப்படுத்த அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி இன்று ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 49 ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுற்றுலாப் பயணிகள், சவுதி அரேபியாவிற்கு வர அனுமதி வழங்கப்படும் என்றும் அவ்வாறு வரும் போது தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழ் மற்றும் 72 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 31 July 2021 11:56 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?