/* */

டிவிட்டர் ப்ளூ டிக் வேணுமா? இவ்ளோ பணம் கட்டினா போதும்! கூடவே நிறைய வசதிகளும்!

ரூ. 900 இருந்தாலே போதும் உங்களுக்கு ப்ளூடிக் வசதி கிடைக்கும். மாதா மாதம் ப்ளுடிக் வசதியைப் பெற நீங்கள் 900 ரூபாய் செலுத்த வேண்டும். முன்னதாக இதற்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டி இருந்தது.

HIGHLIGHTS

டிவிட்டர் ப்ளூ டிக் வேணுமா? இவ்ளோ பணம் கட்டினா போதும்! கூடவே நிறைய வசதிகளும்!
X

டிவிட்டர் லோகோ

டிவிட்டரில் நீல நிற டிக் வெரிஃபிகேசன் அடையாளம் வேண்டும் என்றால் அதற்கென கட்டணம் கட்டி பெற்றுக் கொள்ளலாம் என சில மாதங்களுக்கு முன்னர் அதன் புதிய தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் அறிவித்திருந்தார். உலகம் முழுக்க பல நாடுகளில் இந்த ப்ளூ டிக் பயன்பாடு வந்துவிட்டாலும், இந்தியாவில் இப்போதுதான் அறிமுகமாகியிருக்கிறது.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பல நாடுகளிலுள்ள மக்கள் டிவிட்டர் இணைய தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இப்போது வரையில் இலவசமாக பயன்படுத்தப்பட்டாலும், அதன்மூலம் பல வருமானம் பண்ண முடியும் என திட்டமிட்டார் புதிய சிஇஓ வான எலான் மஸ்க். இவர் சமீபத்தில்தான் டிவிட்டரை விலைக்கு வாங்கியிருந்தார். வந்த உடன் ப்ளூடிக் வெரிபிஃகேஷன் வேணுமா காசு கட்டுங்கோ என அதிரடி மாற்றங்கள் பலவற்றைக் கொண்டு வந்தார்.

டிவிட்டரின் பல தலைகளை உருட்டி வெளியேற்றினார். பின் போலி கணக்குகளை அடையாளம் கண்டு அனைத்தையும் நீக்கப் போகிறோம் என அறிவித்தார். அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு காசு கட்ட வேண்டும் என்கிற திட்டத்தையும் கொண்டு வந்துள்ளார்.

அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் என மிக பிரபலமானவர்கள் இந்த ப்ளூ டிக் பெற கட்டணம் செலுத்த வேண்டும்.

எவ்வளவு கட்டணம்

ரூ. 900 இருந்தாலே போதும் உங்களுக்கு ப்ளூடிக் வசதி கிடைக்கும். மாதா மாதம் ப்ளுடிக் வசதியைப் பெற நீங்கள் 900 ரூபாய் செலுத்த வேண்டும். முன்னதாக இதற்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டி இருந்தது. ஆனால் இனிமேல் கட்டணம் மட்டும் செலுத்தினாலே இதற்கான வசதிகள் அனைத்தும் வந்துவிடும். எளிமையான முறையில் ப்ளூடிக் உங்கள் சுயவிவரப் பக்கத்தில் இருக்கும்.

எப்படி பெறுவது

  • டிவிட்டர் பக்கத்தின் இடதுபுறத்தில் இருக்கும் முகப்பு புகைப்படத்தை தொடுங்கள்
  • அதில் டிவிட்டர் ப்ளூ எனும் ஆப்சன் இருக்கும். அதனை கிளிக் செய்யுங்கள்.
  • பேமண்ட் பக்கம் திறக்கும். உரிய பணத்தை செலுத்தி ப்ளூடிக் வசதியைப் பெறுங்கள்.


எங்கெல்லாம் இந்த வசதி இருக்கிறது?

பிரேசில், இந்தோனேசியா, ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், சவுதி, இங்கிலாந்து, ஜப்பான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் இந்த வசதி இப்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

யாரெல்லாம் பயன்படுத்த முடியும்?

ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பவர்கள், ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் பயனாளர்கள் யாவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

என்னென்ன வசதிகள்?

  • ப்ளூடிக் வசதியைப் பெற்றால் தேடல்களில் உங்கள் பதிவுகள், பதில்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்
  • நீண்ட நெடிய வீடியோ மற்றும் ஆடியோ பதிவேற்ற வாய்ப்பு கிடைக்கும்
Updated On: 9 Feb 2023 7:01 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...