/* */

விழுப்புரம் மாவட்டத்தில் 6097 பதவிகளுக்கு 24000 பேர் மனு தாக்கல்

உள்ளாட்சித்தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 6097 உள்ளாட்சி பதவிகளுக்கு 24000 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் 6097 பதவிகளுக்கு 24000 பேர் மனு தாக்கல்
X

விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற 6,9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக 28 மாவட்ட கவுன்சிலர், 293 ஒன்றிய கவுன்சிலர், 688 ஊராட்சி மன்றத் தலைவர், 5088 ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 6097 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது, அதனையடுத்து கடந்த 15 ந்தேதி முதல் தேர்தலில் போட்டியிடுவோர் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வந்தனர்.

இந்நிலையில் வேட்பமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று மாவட்டம் முழுவதும் 7210 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர், அதில் மாவட்ட கவுன்சிலருக்கு 155 பேரும், ஒன்றிய கவுன்சிலருக்கு 1121 பேரும், ஊராட்சி மன்றத் தலைவருக்கு 978 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 4956 பேரும் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்,

மாவட்டத்தில் மொத்தம் 24000 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர், அதில் மாவட்ட கவுன்சிலருக்கு 241 பேரும்,ஒன்றிய கவுன்சிலருக்கு 2091 பேரும், ஊராட்சி மன்றத் தலைவருக்கு 4138 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 17530 பேரும் இதுவரை தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்.

Updated On: 23 Sep 2021 7:01 AM GMT

Related News