/* */

வேலூரில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்

வேலூரில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

HIGHLIGHTS

வேலூரில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்
X

வேலூர் போக்குவரத்து நெரிசல், (பைல் படம் )

சென்னை, பெங்களூர் மெட்ரோ நகரங்களுக்கு இடையில் பெரிய மாநகரமாக வேலூர் உள்ளது. வேலூரிலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பஸ், ரெயில் போக்குவரத்து உள்ளது.

வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சிகிச்சைக்காகவும், தங்க கோவில் மற்றும் சுற்றுலாத் தலங்களை காண ஏராளமானோர் வந்து செல்வதால், வேலூர் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருவதால், வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லும் பஸ்கள் மட்டும் இயக்கப்படுகின்றன பிற இடங்களுக்குச் செல்லும் பஸ்கள் பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய மீன் மார்க்கெட் அருகே இருந்து இயக்கப்படுகிறது.

மக்கள் தொகையும், வாகன எண்ணிக்கையும் அதிகரித்து வரும் அளவிற்கு வேலூரில் புதிதாக பாலமோ, சாலை அமைப்போ ஏற்படுத்தாதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நேஷனல் தியேட்டர் சர்க்கிள் கிரீன் சர்க்கிள் வரை வாகனங்களின் அணிவகுப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. பழைய பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள மண்டி வீதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான சாலைகள் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

போக்குவரத்து போலீசாரும் அடிக்கடி போக்குவரத்தில் சில மாற்றங்களை செய்தாலும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியவில்லை. அண்ணா சாலையில் இருந்து காட்பாடி, சத்துவாச்சாரி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் மக்கான் சிக்னலில் திரும்பாமல் பழைய பைபாஸ் சாலையில் செல்லுமாறு போக்குவரத்து மாற்றம் செய்தனர். இதிலும் நெரிசலுக்கு நிரந்த தீர்வு காணவில்லை.

சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலை வசதி மற்றும் புதிதாக பாலங்கள் அமைக்காவிட்டால் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணமுடியாது. வேலூர் இதய பகுதியான கிரீன் சர்க்கிள் பகுதியே நெரிசலுக்கு முக்கிய பகுதியாக உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்றால் கிரீன் சர்க்கிளுக்கு வரும் வாகனங்கள் எண்ணிக்கை குறைக்க வேண்டும். அதற்கு புதிதாக 3 இடங்களில் பாலம் அமைத்தால் தீர்வு காணப்படலாம்.

நேஷ்னல் சிக்னலில் இருந்து பெட்ரோல் பங்க் வழியாக செல்லும் சாலை 6 வழிச்சாலையில் முட்டும் இடத்தில் சுரங்கப்பாலம் அமைத்து புதிய காட்பாடி பாலாற்று பாலத்துடன் இணைக்க வேண்டும். அவ்வாறு அதில் சுரங்கப்பாதை அமைத்தால் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் கிரீன் சர்க்கிளுக்கு செல்லாமல் புதிய பஸ் நிலையம் மற்றும் காட்பாடிக்கு செல்லலாம்.

வேலூர் கலெக்டர் அலுவலகம், எஸ்.பி. ஆபீஸ் சாலை வழியாக பாலாற்றில் புதிதாக தரைப்பாலம் அமைத்து காங்கேயநல்லூர் ரவுண்டானாவை இணைத்தால், காட்பாடி பகுதியில் இருந்து வாகனங்கள் கிரீன் சர்க்கிள் செல்லாமல் சத்துவாச்சாரியை அடைந்து சென்னை, ராணிப்பேட்டை, வாலாஜாவுக்கு செல்லலாம்.

சேண்பாக்கம் ரெயில்வே பாலத்தையொட்டி புதிதாக ஒரு பாலம் அமைத்தால் காட்பாடி, ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்கள் கிரீன் சர்க்கிள் வராமல் செல்லலாம்.

வேலூர், மக்கான் சிக்னலில் இருந்து நேஷனல் சிக்னல் வரை பாலம் அமைக்கும் திட்டம் தீட்டப்பட்டு கிடப்பில் உள்ளது. அதனை செயல்பாட்டு கொண்டு வந்தால் மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம்.

புதிய பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே கிரீன் சார்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. புதிய பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால் மேலும் வாகன எண்ணிக்கையும் அதிகரித்து பெரும் அளவில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட வாய்ப்புள்ளது. வளர்ந்து வரும் மாநகரத்தில் புதிதாக பாலம் கட்டாமல் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியாது என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

Updated On: 14 March 2022 1:31 PM GMT

Related News

Latest News

  1. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  2. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  3. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  4. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  6. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  7. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  9. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்