/* */

வெயிலை சமாளிக்க பறவைகளுக்கு தண்ணீர் வைத்த சமூக ஆர்வலர்கள்

சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க வேலூரில் சமூக ஆர்வலர்கள் பறவைகளுக்கு தண்ணீர் வைத்தனர்.

HIGHLIGHTS

வெயிலை சமாளிக்க  பறவைகளுக்கு தண்ணீர் வைத்த சமூக ஆர்வலர்கள்
X

மரங்களில் பறவைகளுக்கு பிளாஸ்டிக் டப்பாக்களில் நீர் வைக்கும் சமூக ஆர்வலர்கள் 

வேலூரில் வெப்பத்தின் அளவு, அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிகப்படியான வெப்பம், தண்ணீர் தாகத்தால் சில நேரங்களில் மனிதர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

மனிதர்களாலேயே தாங்க முடியாத வெப்பத்தை, சிறிய பறவைகள் எப்படி தாங்கும்?; வெயிலின் தாக்கம் காரணமாக பறவைகள், வனவிலங்குகளின் உயிரிழப்புகள் அடிக்கடி நடக்கின்றன.

உணவில்லாமல் கூட ஒரு சில நாட்கள் வாழலாம். ஆனால், தண்ணீர் இல்லாமல் வாழவே முடியாது என்பது, உலகம் அறிந்த உண்மை. இது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து உயிர்களுக்கும் பொருந்தும்.

எனவே பறவைகளுக்கு தண்ணீர் வைப்பது ஒரு சிறிய முயற்சி தான். நமது சுற்றுப் புறங்களில் பறவைகளின் நடமாட்டத்தை கண்காணித்து, சிறிய குவளைகளில் தண்ணீர் வைக்கலாம்.

வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் மரங்களில் டப்பாக்களை கட்டி சமூக ஆர்வலர்கள் பறவைகளுக்கு தண்ணீர் வைத்து வருகின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், பறவைகளுக்கு தண்ணீர் வைத்தபின், அவை வந்து பருக ஓரிரு நாட்கள் ஆகலாம். பழக்கமாகி, தண்ணீர் அருந்த வரும்போதும், தண்ணீர் அருந்திவிட்டு செல்லும் போதும் நாம் கவனிக்க தொடங்கினால், அதில் ஏற்படுகிற இன்பம் அலாதியானது. இதை அனுபவித்தால் மட்டுமே உணரமுடியும்.

வீடுகளில் தண்ணீர் வைப்பவர்கள், முயன்றவரை மண் சட்டியில் வைப்பது நல்லது. மண்சட்டியில் நீர் வைத்தால், அது வெகு நேரத்திற்கு குளிர்ச்சியாக இருக்கும். பறவைகள் அதில் முங்கி குளித்து, உடல் சூட்டை தணித்துக் கொள்ளும்.

பிளாஸ்டிக் குவளைகளில் தண்ணீர் வைப்பதாக இருந்தால், அதன்மீது வெயில் படாமல், நிழலில் வைப்பது நல்லது என்றனர்.

Updated On: 4 May 2022 12:50 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்