/* */

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைவதால் காலியாக உள்ள வார்டுகள்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1,500 க்கும் அதிகமான படுக்கைகள் காலியாக உள்ளன

HIGHLIGHTS

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைவதால் காலியாக உள்ள வார்டுகள்
X

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைவதால் காலியாக உள்ள வார்டுகள்

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் நேற்று வரை 42,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38,827 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 999 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 751 பேர் பலியாகியுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் இன்று 304 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 326 பேர் பாதிக்கப்பட்டனர். இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் 150 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு மேலும் படுக்கைகள் காலியாகி வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 5 ஆயிரத்து 187 படுக்கைகள் உள்ளன. 383 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,500 க்கும் அதிகமான படுக்கைகள் காலியாக உள்ளன.

ஆனால் இறப்பு விகிதம் குறையவில்லை. நேற்று ஒரே நாளில் 14 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதேபோல தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளன.

பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் மற்றும் ஆக்சிஜன் அளவு 90க்கு மேல் உள்ளவர்கள் காட்பாடி விஐடி மற்றும் வேலூர் தந்தை பெரியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிகிச்சை முகாமில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு ஊரடங்கின் பலனாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.

Updated On: 2 Jun 2021 12:42 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  3. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  4. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  6. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  7. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  8. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  9. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்