/* */

வேலூர் மாநகராட்சி நிதிநிலை அறிக்கை: முக்கிய அம்சங்கள்

வேலூர் மாநகராட்சியின் 2024-2025 நிதிநிலை அறிக்கையில் ரூ.1 கோடியே 84 லட்சத்து 82 ஆயிரம் உபரியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வேலூர் மாநகராட்சி நிதிநிலை அறிக்கை: முக்கிய அம்சங்கள்
X

வேலூர் மாநகராட்சி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது 

வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் தாக்கல் செய்த 2024-25 நிதிநிலை அறிக்கையில், வரி வருவாய், கல்வி நிதி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றின் மூலம் ரூ.794 கோடியே 17 லட்சத்து 11 ஆயிரம் வரவு, ரூ.792 கோடியே 32 லட்சத்து 29 ஆயிரம் செலவு என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1 கோடியே 84 லட்சத்து 82 ஆயிரம் நிதி உபரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்

கல்வி

  • 12 மாநகராட்சி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் (ரூ.4.20 கோடி)
  • 20 பள்ளிகளில் வகுப்பறை பராமரிப்பு (ரூ.2.06 கோடி)
  • மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு, நவீன கழிப்பறைகள், அபாகஸ் பயிற்சி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, விளையாட்டு பூங்கா

வரி வருவாய்

  • அனைத்து வரி வசூல் அலுவலர்களுக்கும் வங்கிகள் மூலம் புதிய கருவி
  • பொது சுகாதாரம்
  • 6 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள் (ரூ.5.40 கோடி)
  • தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மையங்கள் (4 மண்டலங்களில்)
  • சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து மத்திய சிறைத்துறை வசம் ஒப்படைத்தல்
  • உலர் குப்பைகளை எரியூட்டும் கருவிகள் (4 மண்டலங்களில்)

குடிநீர்

  • முதல் மண்டலத்தில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் (ரூ.12.74 கோடி)
  • 4 மண்டலங்களில் குடிநீர் குழாய்கள் அமைக்க அரசுக்கு கருத்துரு (ரூ.16 கோடி)

மாநகர அழகுபடுத்துதல்

  • பூங்கா சாலையோரங்கள் அமைத்தல்
  • முக்கிய இடங்களில் மரக்கன்றுகள் நடவு
  • தொரப்பாடி பெண்கள் சிறைக்கு பின்புறம் அரசு நிலத்தில் பூங்கா
  • வேலூர் கோட்டை அருகே நடைமேம்பாலத்தை நவீன முறையில் மின் தூக்கி வசதியுடன் மாற்றி அமைத்தல்
  • கருணாநிதி நூற்றாண்டு நினைவு நுழைவு வளைவு (வேலூர் மாநகராட்சி அரசு மருத்துவமனை, வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலைய சாலை நுழைவுப் பகுதிகளில்)
  • விடுபட்ட அனைத்து தெருக்களிலும் பெயர் பலகைகள்

பிற

  • தனியார் பங்களிப்புடன் முக்கிய இடங்களில் அழகிய நீரூற்றுகள்
  • 93 பூங்காக்களில் உடற்பயிற்சி கூடம்
  • 4வது மண்டலத்தில் புதிய உடற்பயிற்சி கூடங்கள்
  • தனியார் பங்களிப்புடன் அனைத்து வார்டுகளிலும் பெண்களுக்கான உடற்பயிற்சி கூடம்
  • நேதாஜி மார்க்கெட் பகுதியிலுள்ள வணிக வளாகத்தை ரூ.50 கோடியில் புனரமைப்பு
  • நேதாஜி மார்க்கெட்டில் காய்கறிகள், பூக்களை பாதுகாக்க குளிரூட்டும் அறைகள்

நிதிநிலை அறிக்கை தாக்கல் சித்து மேயர் பேசுகையில், தமிழகத்தை குடிசையில்லா மாநிலமாக உருவாக்கிட சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் 8 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு, ரூ.3 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதற்கும், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் நிதியை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கு விரிவுபடுத்தியதற்கும் முதலமைச்சர் டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் ப.கார்த்திகேயன், துணை மேயர் எம்.சுனில்குமார், ஆணையர் ஜானகி ரவீந்திரன், வருவாய், நிதிக்குழு தலைவர் ரவிக்குமார் உட்பட மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

Updated On: 9 March 2024 5:57 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  2. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  3. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  4. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  5. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  6. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  7. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  8. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?
  9. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  10. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!