/* */

எளிமையாக நடைபெற்றது - குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா.

புகழ்பெற்ற கெங்கை அம்மன் கோவில்.

HIGHLIGHTS

எளிமையாக நடைபெற்றது - குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா.
X

வேலூர் மாவட்டத்தில் பல லட்சம் பேர் கலந்துகொள்ளும் புகழ்பெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா ஊரடங்கு உத்தரவால் நள்ளிரவில் 50 பேருடன் எளிமையாக நடைபெற்றது

வேலூர் மாவட்டம் குடியாத்தம், குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள புகழ்பெற்ற கெங்கை அம்மன் கோவில் உள்ளது இங்கு ஆண்டுதோறும் வைகாசி 1 ம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்

அப்பொழுது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாது ஆந்திரா கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வெகு விமர்சையாக நடைபெறும் கெங்கையம்மன் சிரசு திருவிழா இந்த ஆண்டு உலகமெங்கும் அச்சுறுத்தி வரும் கொரோனா இரண்டாம் அலையால் அனைத்து மத விழாக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஆகம விதிப்படி சிரசு திருவிழாவை நடத்திக் கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அனுமதியளித்தார்.

இதனையடுத்து வைகாசி 1 ம் நாளான இன்று கோட்டாட்சியர் ஷேக் மன்சூர் வட்டாட்சியர் வச்லா மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதரன் ஆகியோரின் தலைமையில் 50 பேருடன் நள்ளிரவில் 2 மணியளவில் கெங்கையம்மன் சிரசு திருவிழா ஆகம விதிப்படி மிக எளிமையாக நடைபெற்றது

பல நூறு ஆண்டுகளாக பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளும் கெங்கையம்மன் சிரசு திருவிழா பல குடைகளுடன் கம்பீரமாக வீதி உலா வரும் சிரசு சென்ற ஆண்டும் இன்றும் ஒரு குடையுடன் 10 நபர்களுடன் நடைபெற்றது பக்தர்களிடையே கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது மேலும் அம்மனைக் காண ஊர் பொதுமக்கள் கோயில் அருகே கூடுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Updated On: 15 May 2021 6:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...