Begin typing your search above and press return to search.
உடுமலையில் நாளை சான்று வழங்கும் முகாம்: விவசாயிகளுக்கு வாய்ப்பு
உடுமலையில், நாளை (29ம் தேதி) சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று வழங்கும் முகாம் நடத்தப்பட உள்ளது.
HIGHLIGHTS

பைல் படம்.
மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படும், நுண்ணீர்பாசன மானியம் பெற, சிறு, குறு விவசாயி சான்று பெறுவது அவசியம். இச்சான்று பெறுவதற்கான சிறப்பு முகாம், உடுமலையில் நாளை நடத்தப்பட உள்ளது. காலை, 10:00 மணியளவில், குடிமங்கலம் ஒன்றியம், பெரியப்பட்டியிலும், மதியம், 2:00 மணியளவில், மூங்கில்தொழுவு கிராமத்திலும், சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களில் முகாம் நடத்தப்படும். மேலும், விபரம் தேவைப்படுவோர், தோட்டக்கலை அலுவலர், 8883610449 என்ற எண்ணில் தொடர்புகொண்டு விளக்கம் பெற்றுக் கொள்ளலாம் என வட்டார தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.