/* */

திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்

அவிநாசி அருகே, தெக்கலுாரில் அரிசிக்கடையில் இருந்த ரூ. ஒரு லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்
X

திருப்பூர் மாவட்டத்தில் நடந்த குற்றச்சம்பவங்களின் தொகுப்பு.

அரிசிக்கடையில் ரூ. ஒரு லட்சம் திருட்டு

அவிநாசியை அடுத்த தெக்கலூரை சேர்ந்தவர் சண்முகம் (வயது73). இவர் தனது அரிசி ஆலையில் ஒரு பகுதியில் அரிசி மூட்டைகளை வைத்து சில்லறை வியாபாரம் செய்கிறார். இந்நிலையில், நேற்றிரவு வியாபாரத்தை முடித்துவிட்டு அரிசி ஆலை காம்பவுண்டில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுவிட்டார். பிறகு காலையில் அரிசி ஆலையின் கதவை திறக்க வந்தபோது மேற்கூரை சிமெண்டு சீட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அரிசி மூட்டை அறை கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அப்போது அங்கிருந்த பீரோவை உடைத்தும், டேபிள் டிராயரை கம்பியால் நெம்பி திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.ஒரு லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து சண்முகம் அவிநாசி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு விசாரித்து வருகின்றனர்.

பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பூர் மங்கலம் ரோடு, ஆண்டிபாளையம் சின்னியகவுண்டன் புதூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 46) அப்பகுதியில், மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி முத்து லட்சுமி (41). இவர்களுக்கு 2 மகள்கள். 2-வது மகள் அர்ச்சனா (16) முருகம்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் பயிற்சி தேர்வு எழுதியுள்ளார். இதிலும் மதிப்பெண் குறைவாக வரும் என்று தனது குடும்பத்தாரிடம் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அர்ச்சனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சென்ட்ரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பெண்ணை தாக்கியவர் கைது

தாராபுரம் அடுத்த வரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலன் மகள் மணிமேகலை (வயது 29). காதபுள்ளபட்டியை சேர்ந்தவர் பாலுசாமி. இவர்கள் இருவரும் இனைந்து பேக்கரிக்கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாலுசாமி, கடந்த 2 மாதங்களாக கடைக்கு சரியாக வராமல் இருந்துள்ளார். இதுகுறித்து மணிமேகலை, பாலுசாமியை தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் முடியவில்லை. பாலுசாமிக்கு பதிலாக, அவரது மனைவி பூங்கொடி கடைக்கு வந்து, 'இனிமேல் நான்தான் கடையை நடத்த போகிறேன்' என, மணிமேகலையிடம் கூறியுள்ளார். இதனை கேட்ட மணிமேகலை, மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், பூங்கொடியின் உறவினரான நல்லிமடம் செங்காட்டூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (42) என்பவர் கடைக்கு வந்து, கடையை காலிசெய்யுமாறு மணிமேகலையை மிரட்டி தகாத வார்த்தையால் பேசி, தாக்கியதாக தாராபுரம் போலீசில் மணிமேகலை புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், வன்கொடுமை சட்டதின்கீழ் செந்தில்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வாலிபர் மீது 'குண்டாஸ்' பாய்ந்தது

பல்லடம் அருகே கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 32). இவர் கடந்த அக்டோபர் 14-ம் தேதி இரவு சென்னிமலைபாளையத்தில் உள்ள மைதானத்தில் தனது சகோதரருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மங்கலம் வெள்ளஞ்செட்டிப்பாளையத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (26) மற்றும் 2 பேர் மது அருந்திக்கொண்டிருந்தனர். அவர்கள் திடீரென்று பார்த்திபனை தகாத வார்த்தையால் திட்டி தாக்கினர். கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை பறித்தனர். காயமடைந்த பார்த்திபன் பல்லடம் அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்றார். இதுகுறித்து, பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விக்னேஸ்வரன் மீது ஏற்கனவே வழிப்பறி வழக்கு, அடிதடி வழக்கு, கொலைமுயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு ஆகியவை உள்ளன. எனவே தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் விக்னேஸ்வரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, போலீஸ் எஸ்.பி சசாங் சாய் கலெக்டருக்கு பரிந்துரைத்தார். கலெக்டர் வினீத் உத்தரவுப்படி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு, கோவை சிறையில் உள்ள விக்னேஸ்வரனிடம், பல்லடம் டிஎஸ்பி சவுமியா வழங்கினார்.

முதியவர் பலி

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு மண்ணரையை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 74). இவர் திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஓட்டலில் கேஷியராக பணி செய்தார். இவர் தினமும் மண்ணரை பகுதியில் நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம். நேற்று காலை அவர் நடைபயிற்சிக்கு சென்றார். காலை 7 மணி அளவில் பாரப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, சுப்பிரமணியம் ரோட்டில் சென்றபோது, திருப்பூரில் இருந்து ஈரோடு சென்ற தனியார் பஸ் மோதியது. இதில் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Updated On: 24 Nov 2022 1:43 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  2. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  4. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  5. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  6. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  7. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  9. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  10. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்