/* */

திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்

திருப்பூர் பாரதி நகரில், மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையில், 10 லிட்டர் கள்ளச்சாராயம் சிக்கியது.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்
X

திருப்பூரில், பத்து லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது (கோப்பு படம்)

கள்ளசாராயம் விற்பனை செய்த வாலிபர் கைது

திருப்பூர் பாரதி நகர் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பதாக திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மாநகர மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பாரதி நகர் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மறைவான ஒரு இடத்தில் வாலிபர் ஒருவர் சாராயத்தை பதுக்கி வைத்து, விற்பனை செய்தது தெரியவந்தது. அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் சேலத்தைச் சேர்ந்த செல்வம் என்பது தெரியவந்தது. போலீசார் செல்வத்தை கைது செய்து, 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லுாரி மேலாளர் வீட்டில் திருட்டு

குன்னத்தூர் அருகே சேரன் நகர், பவர்ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் சண்முக ஜீவா. தனியார் கல்லூரியில் மேலாளர். இவரது மனைவி சுசீலா. தனியார் பள்ளியில் ஆசிரியை. தம்பதி பணிக்கு சென்று விட்டனர். இவர்களது 2 மகன்களும், வீட்டை பூட்டிவிட்டு கோபிக்கு தேர்வு எழுத சென்று விட்டனர். தேர்வு எழுதிவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்தபோது, கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து குன்னதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ஏழு ஆடுகள் மாயம்

தாராபுரம் தாலுாகா குண்டடம் அடுத்துள்ள இடையன்கிணறு பகுதியை சோ்ந்தவா் சங்கா் (வயது 48). இவா் 60 செம்மறியாடுகளை வளா்த்து வருகிறாா். தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு, வீட்டுக்கு சென்றாா். காலை வந்து பாா்த்த போது, பட்டியில் ஆடுகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. எண்ணிப் பாா்த்த போது 7 பெரிய செம்மறி ஆடுகளைக் காணவில்லை. மேலும் தோட்டத்தைச் சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்த நிலையில், கம்பி வேலியின் ஒரு இடத்தில் அறுத்து உள்ளே நுழைந்து ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. திருடப்பட்ட ஆடுகளின் மதிப்பு ரூ.70 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. குண்டடம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

விபத்தில் வாலிபர் பலி

தஞ்சையை சேர்ந்த அந்தோணிராஜ் மகன் ஜஸ்வந்த் (வயது 19). இவர், திருப்பூர் சாமளாபுரத்தில் அவரது நண்பர்அந்தோணி என்பவருடன் சேர்ந்து, 'பிளம்பிங்' வேலை செய்து வந்தார். இந்நிலையில், தீபாவளியையொட்டி அந்தோணி அவரது சொந்த ஊருக்கு செல்ல இருந்தார். இதையடுத்து, பஸ் ஏறுவதற்காக திருப்பூர் கோவில்வழி பஸ் ஸ்டாண்டுக்கு இன்று காலை 2பேரும் மோட்டார் பைக்கில் புறப்பட்டனர். கோவில்வழி பஸ் ஸ்டாண்டை சென்றடைந்ததும், பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே வந்த அரசு டவுன் பஸ்சும், மோட்டார் பைக்கும் மோதியது. இதில் 2 பேரும் பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் ஜஸ்வந்த், பஸ் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் உயிரிழந்தார். அந்தோணி காயமடைந்தார்.விபத்து குறித்து நல்லுார் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 23 Oct 2022 11:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  2. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  3. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  4. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  5. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  6. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  9. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  10. லைஃப்ஸ்டைல்
    50 அழகிய மேற்கோள்களுடன் ரமலான் வாழ்த்துக்கள்!