திருப்பூரில் 20 வது நிட்ஷோ கண்காட்சி துவக்கம்

Exhibition Hall - நிட்ஷோ டிரேடு எக்ஸ்போசிஷன் நிறுவனம் சார்பில், 20வது நிட்ஷோ கண்காட்சி, திருப்பூர் காங்கயம் ரோடு டாப்லைட் சென்டரில் நேற்று துவங்கியது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருப்பூரில் 20 வது நிட்ஷோ  கண்காட்சி துவக்கம்
X

திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள டாப்லைட் சென்டரில் துவங்கிய நிட்ஷோ கண்காட்சியை, ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் பார்வையிட்டார். 

Exhibition Hall -திருப்பூரில் பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் நடத்தப்படும் இதன் துவக்க விழாவுக்கு, கண்காட்சி இயக்குனர் கிருஷ்ணா தலைமை வகித்தார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம், கண்காட்சியை துவக்கி வைத்தார். சைமா சங்க தலைவர் ஈஸ்வரன், நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன், டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த், சிம்கா தலைவர் விவேகானந்தன், டிப் சங்க தலைவர் மணி, எம்பிராய்டரி சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கண்காட்சியில் உள்ள அரங்குகளை பார்வையிட்டனர். இந்த கண்காட்சியில் குளிரூட்டப்பட்ட 6 ஹால்களில் 450 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், சீனா, இத்தாலி, போர்ச்சுகல், துருக்கி, தைவான் போன்ற நாடுகளில் இருந்து நவீன பின்னலாடை எந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர், கோவை, ஈரோடு, பெங்களூரு, புதுடெல்லி, லுாதியானா உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளும் கண்காட்சி அரங்குகளில் இடம் பெற்றுள்ளது. கண்காட்சியின் முதல் நாளான நேற்று ஆயிரக்கணக்கான தொழில்துறையினர் கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

கண்காட்சி இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. கண்காட்சிக்கு நுழைவுக்கட்டணம் இல்லை என்றும், தொழில்துறையினர், பார்வையாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது நிறுவனங்களின் அடையாள அட்டையுடன் கண்காட்சியை பார்வையிடலாம் என்று கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

நிட்ஷோ கண்காட்சியில் பிரிண்டிங், தையல், எம்பிராய்டரி, பின்னல் என ஏராளமான அதிநவீன எந்திரங்களும், வெளிநாட்டு, உள்நாட்டு மூலப்பொருட்களும் இடம் பெற்றுள்ளன. இதில் திருப்பூர் மேகலா மெஷின்ஸ் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் சைனா தொழில்நுட்பத்தில் ஆர்ப்பிட்டோ எனும் யூனிட் புரொடக்சன் சிஸ்டம் என்ற ஹேங்கர் எந்திரம் இடம் பெற்றுள்ளது. இதை பயன்படுத்துவதன் மூலமாக அதிக தொழிலாளர்கள் இல்லாமல் 30 சதவீத உற்பத்தியை அதிகரிக்கலாம். மேலும் ஆடைகளில் சேதம் இல்லாமல் பாதுகாப்பாக உற்பத்தி செய்வதற்கு இந்த எந்திரம் பெரிதும் உதவியாக இருக்கும். சாதாரண தையல் எந்திரத்தில் கூட இந்த சிஸ்டத்தை பொருத்த முடியும். ஜப்பான் தொழில்நுட்பம் பெஸ்ட் எம்ப்ரோ கேர் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள எம்பிராய்டரி சீக்கொன்ஸ் அட்டாச்மென்ட் எந்திரம் கண்காட்சியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சைனா தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எந்திரத்தில் ஒரே நேரத்தில் 15 மற்றும் 12 நிறங்களில் சீக்கொன்ஸ் அடிக்க முடியும். உள்நாட்டு ஆடைகளில் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் உற்பத்தி செய்ய முடியும். மேலும் ஏற்றுமதி பின்னலாடையில் சாம்பிள் ஆடைக்கு இந்த எந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த கண்காட்சியில் ஜப்பான் தொழில்நுட்பத்தில் உருவான அதிநவீன எந்திரமான எப்சன் என்ற எந்திரத்தின் மூலமாக நேரடியாக டி-சர்ட்டில் பிரிண்ட் செய்ய முடியும்.

பாறைப்பொடியில் இயற்கை சாயம் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பாறை பொடி தொழில் துறையினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிகப்படியான எண்ணிக்கையிலான ஆர்டர்களுக்கு ஸ்கிரீன் பிரிண்டிங் மூலமாக பிரிண்ட் செய்யலாம். ஆனால் 1,2,3 என மிகக்குறைந்த எண்ணிக்கையிலான ஆடைகளில் பிரிண்ட் செய்வதற்கு இந்த எந்திரத்தை பயன்படுத்தலாம். இதன் மூலமாக அதிக செலவை தவிர்க்கலாம். தேவையான டிசைனை கம்ப்யூட்டரில் தயார் செய்து, எந்திரத்தில் பொருத்தும்போது, அது டி-சர்ட்டில் அப்படியே பிரிண்ட் ஆகும். பின்னலாடை ஏற்றுமதியில் சாம்பிள் ஆர்டர்களுக்கு இந்த எந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கண்காட்சியில் முதல் முறையாக டி.எஸ். இங்க் கேர் நிறுவனத்தினர் டையிங் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்களுக்கு தேவையான மாசு இல்லாத இயற்கை சாயத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர். பாறைபொடி பாறையை சூடாக்கும்போது நிறம் மாறி கிடைக்கும் பொடியை சாயமாக்கி முற்றிலும் இயற்கையான முறையில் இதை தொழில்துறையினருக்கு வழங்குகின்றனர். இந்த சாயம் மொத்தம் 40 நிறங்களில் கிடைக்கிறது. இதை பயன்படுத்துபோது மாசு ஏற்படாமல் இருப்பதுடன், தொழிலாளர்கள் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. திருப்பூர், சென்னை, பெங்களூரு, கரூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் ஏராளமான டையிங் மற்றும் பிரிண்டிங் தொழில்துறையினர் இதை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இது தொழில்துறையினரிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

நிட்ஷோ கண்காட்சி குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறியதாவது:

நூல்விலை போன்ற பிரச்சினைகளை தாண்டி, தற்போது அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி பின்னலாடை தொழில் பயணிக்கிறது. அதற்கு இந்த கண்காட்சி பெரிய உதவியாக இருப்பதுடன், திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கு நிட்ஷோ கண்காட்சி பெரிய பங்களிப்பாக உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரின் வர்த்தகம் ரூ.5 ஆயிரம் கோடிக்கு கீழாக இருந்தது. இன்று ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு ஆடை வர்த்தகம் ரூ.70 ஆயிரம் கோடியை தாண்டி உள்ளது. ஒட்டு மொத்த இந்தியாவில் பின்னலாடை தயாரிப்பில் திருப்பூர் 60 சதவீதத்தை கடந்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்றுமதியில் முதலிடத்தில் இருப்பது காஞ்சிபுரம் ஆகும். 2-வது சென்னை மற்றும் 3-வது இடத்தில் திருப்பூர் உள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் திருப்பூர் ஏற்றுமதி காஞ்சிபுரத்தை முந்தி விடும். சீரான வளர்ச்சிப்பாதையில் செல்லும் திருப்பூரில் நிரந்தர கண்காட்சி வளாகம் அமைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-08-16T16:36:54+05:30

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  திருச்செந்துார் செந்தில் நாதன் முருக பெருமான் பற்றி அறிவோம்!
 2. கல்வி
  JKKN மருந்தியல் கல்லூரி மாணவன் மாநில அளவிலான மல்யுத்தப்போட்டியில்...
 3. தமிழ்நாடு
  புதிய சிக்கலில் மாட்டினார் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி.
 4. சினிமா
  'பொன்னியின் செல்வன்' படத்தை தாய்லாந்தில் பார்த்த வனிதா விஜயகுமார்..!
 5. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 6. சினிமா
  மும்பை ஓட்டலில் தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை
 7. தென்காசி
  தென்காசி மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
 8. லைஃப்ஸ்டைல்
  மற்றவர் காலில் விழுவது அவமானமா? வெகுமானமா?
 9. சினிமா
  'இந்தி தெரியாது போடா..!' - முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இயக்குநர்...
 10. நாமக்கல்
  2 வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் நரிக்குறவர் காலனி மக்கள்...