/* */

சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில்; வரும் 5ல், தைப்பூச தேரோட்டம்

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், வருகிற 5-ம் தேதி தொடங்குகிறது.

HIGHLIGHTS

சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில்; வரும் 5ல், தைப்பூச தேரோட்டம்
X

சிவன்மலை கோவிலில், சிறப்பு அலங்காரத்தில், வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான். (கோப்பு படம்).

திருப்பூர் மாவட்டம், காங்கயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 5-ம் தேதி தொடங்குகிறது. மூன்று நாட்களுக்கு நடக்கும் தேரோட்டம் என்பது இதில், விசேஷமானது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் தேர்த்திருவிழாவுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. தொடர்ந்து, கடந்த 30-ந்தேதி காலை 6 மணிக்கு வீரகாளியம்மன் மலைக்கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜையும், மயில் வாகன அபிஷேகமும் நடைபெற்றது. 11 மணியளவில் விநாயகர் வழிபாடும் தொடர்ந்து முருகன் கோவில் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் மதியம் 12 மணியளவில் கொடி ஏற்றப்பட்டது. இதனை கட்டளைதாரர் 24 நாட்டு கொங்கு நாவிதர்கள் செய்திருந்தனர்.


பின்னர் சுவாமி சப்பரத்தில் மலையை வலம் வந்தார். ஒரு மணிக்கு சாமி மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளல் பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தினசரி காலை 9 மணிக்கு காலசாந்தி கோவில் மற்றும் பல்வேறு சமூக மக்களின் சார்பில் மண்டபக்கட்டளை நடைபெறும். நாளை(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மைசூர் பல்லக்கில் சுவாமி மலையை வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 5-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து காலை 6 மணிக்கு சுவாமி ரதத்திற்கு எழுந்தருளுகிறார். அதன் பின்னர் மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் முன்னிலையில் தேர் வடம் பிடித்து பக்தர்களால் பிடிக்கப்பட்டு இழுத்து செல்லப்படும். வருகிற 6-ம் தேதி (திங்கட்கிழமை) 2-வது நாளாக மீண்டும் பக்தர்களால் தேர் இழுக்கப்பட்டு மலையை சுற்றி வலம் வரும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச்செல்வார்கள்.வருகிற 7-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை திருத்தேர் நிலையை அடைகிறது.

வருகிற 10- ம்தேதி தெப்ப உற்சவம் பரிவேட்டை நடக்கிறது. 11-ம் தேதி பகல் 12 மணிக்கு மகா தரிசனம் நடக்கிறது. 12-ம் தேதி மதியம் 12 மணிக்கு தீர்த்த வாரியும், 14-ம் தேதி மாலை 3 மணியளவில் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழாவும், திருமலைக்கு சுவாமி எழுந்தருளலும், மலைமீது அபிஷேக ஆராதனையும் நடக்கிறது. இரவு கொடி இறக்குதல் மற்றும் பாலிகை நீர்த்துறை சேர்த்தலுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

Updated On: 3 Feb 2023 8:42 AM GMT

Related News