/* */

காங்கயம் அருகே விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ் சிறைபிடிப்பு

Tirupur News- காங்கயம் அருகே விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

காங்கயம் அருகே விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ் சிறைபிடிப்பு
X

Tirupur News- காங்கயம் அருகே தனியார் பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள அவினாசிபாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 46). வேன் ஓட்டுநர். இவர் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மதியம் தனது இரு சக்கர வாகனத்தில் சாலையை கடந்து செல்ல காங்கயம் பஸ் ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது ஈரோட்டில் இருந்து பழனிக்கு சென்ற தனியார் பஸ் ஒன்று அதிவேகத்தில் சென்று பொன்னுசாமி மீது மோதியதாக தெரிகிறது. இந்த விபத்தில் பொன்னுசாமி பஸ்சுக்கு அடியில் சிக்கி படுகாயமடைந்தார்.

உடனே அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பொன்னுசாமியை மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் ஆவேசம் அடைந்து அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காங்கயம் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து பொதுமக்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர். இதனால் காங்கயம் பஸ் ஸ்டாண்ட் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுவாக, காங்கயம் வழியாக திருப்பூருக்கு இயக்கப்படும் கரூர், ஈரோடு தனியார் பஸ்கள் அதிவேகமாக இயக்கப்படுகின்றன. நகர பகுதிக்குள் மற்றும் ஊர்கள் உள்ள பகுதிகளில், ரோட்டில் மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் கூட பஸ்களின் வேகத்தை குறைப்பதில்லை. எனவே, தனியார் பஸ்களுக்கு வேக கட்டுப்பாடு கொண்டு வருவது மிகவும் முக்கியம். இதுபோன்ற விபத்துகள் நடக்க, கட்டுப்பாடற்ற வேகத்தில் பஸ்கள், லாரிகள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படுவதுதான் முக்கிய காரணம் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Updated On: 22 Nov 2023 7:56 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  2. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  3. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  5. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  7. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  10. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...