/* */

மூலனூா் ஊராட்சியில் ரூ.4.24 கோடியில் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் துவக்கம்

Tirupur News- மூலனூா் ஊராட்சியில் ரூ.4.24 கோடியில் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர்கள் முபெ சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவங்கி வைத்தனர்.

HIGHLIGHTS

மூலனூா் ஊராட்சியில் ரூ.4.24 கோடியில் மதிப்பில்  வளா்ச்சித் திட்டப் பணிகள் துவக்கம்
X

Tirupur News- மூலனூா் ஊராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர்கள் முபெ சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் துவங்கி வைத்தனர்.

Tirupur News,Tirupur News Today- காங்கயம் அருகேயுள்ள மூலனூா் ஊராட்சியில் ரூ.4.24 கோடியில் மதிப்பில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் சனிக்கிழமை தொடங்கிவைத்தனா்.

காங்கயம் வட்டம், மூலனூா் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் செந்தில் அரசன் தலைமை வகித்தாா். இதில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று ராக்கியாவலசில் ரூ.2.05 கோடி மதிப்பீட்டில் தாா் சாலை அமைத்தல், மேட்டுப்பட்டி அருகில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.50 லட்சத்தில் தாா் சாலை புதுப்பித்தல், பொது நிதி பணிகள் திட்டத்தின்கீழ் ரூ.1.69 கோடியில் கான்கிரீட் சாலை அமைத்தல் என மொத்தம் ரூ.4.24 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தனா்.

இதைத் தொடா்ந்து, மூலனூா் ஊராட்சி ஒன்றியம், கிளாங்குண்டல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.25.37 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் 73.53 லட்சத்தில் கட்டப்பட்ட மகளிா் சுய உதவிக்குழு கட்டடம், ரூ.30 லட்சத்தில் கிளாங்குண்டல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டடம் என மொத்தம் ரூ.1.29 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளையும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்துவைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், திருப்பூா் மாநகராட்சி 4-வது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், இணைப் பதிவாளா் (கூட்டுறவு சங்கங்கள்) சொ.சீனிவாசன், துணைப் பதிவாளா் கந்தசாமி, மூலனூா் பேரூராட்சித் தலைவா் மக்கள் தண்டபாணி, மூலனூா் ஊராட்சி ஒன்றிக்குழுத் தலைவா் சுமதி காா்த்திக், மூலனூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்ரீதா், பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Updated On: 11 Feb 2024 3:47 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  2. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  6. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  8. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  9. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  10. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...