/* */

ஜோலார்பேட்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து எம்.எல்.ஏ தேவராஜ் ஆலோசனை

ஜோலார்பேட்டையில் உள்ள 38 ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து எம்.எல்.ஏ தேவராஜ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்

HIGHLIGHTS

ஜோலார்பேட்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து எம்.எல்.ஏ தேவராஜ் ஆலோசனை
X

ஜோலார்பேட்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ தேவராஜ் ஆலோசனை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் உள்ள 38 ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் தலைமையில் ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது

இந்த கூட்டத்தில் ஊராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஊராட்சி பகுதிகளில் தினந்தோறும் கிருமிநாசினிகள் தெளிக்கப்படுகிறதா மற்றும் சுகாதார குழு ஆய்வு செய்கின்றனரா என்பது குறித்தும் அதிகாரிகளிடம் சட்டமன்ற உறுப்பினர் கேட்டறிந்தார்

மேலும் ஊராட்சி பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க ஒவ்வொரு ஊராட்சிகளிலும் பார்வையிட்டு அதற்கு தீர்வு காண வேண்டும் எனவும் அதிகாரியிடம் கூறினார்.

ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் சென்றடைய வேண்டும் என அதற்கான நடைமுறைப்படுத்த அதிகாரியிடம் கேட்டுக்கொண்டார். மேலும் அரசு அறிவித்துள்ள திட்டங்கள் மக்களிடம் சென்றடைந்து உள்ளனவா என்பதை அதனை ஒழுங்குபடுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர், ஊராட்சி செயலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Updated On: 21 May 2021 12:16 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  4. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  6. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  7. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  9. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
  10. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை