/* */

அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்து தமிழர் விடுதலை கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

அமைச்சர் ராஜகண்ணப்பன் பதவி விலகக் கோரி நெல்லையில் தமிழர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்து தமிழர் விடுதலை கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்
X

நெல்லையில் தமிழர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி ரீதியாக திட்டி மன உளைச்சலை ஏற்படுத்திய அமைச்சர் ராஜகண்ணப்பன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கவும், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி நெல்லையில் தமிழர் விடுதலை களம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசியது குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக அவரது அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு தமிழர் விடுதலைக் கழகம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேவேந்திர குல வேளாளர் வகுப்பைச் சார்ந்த முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை ஜாதி பெயரைச் சொல்லி இழிவாக ஒருமையில் பேசியுள்ள தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சரான ராஜகண்ணப்பன் மீது உடனடியாக தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து அவரது பதவியை பறிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் (கிழக்கு) மங்களராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பிரதிநிதி போஸ் பாண்டியன், தச்சை பகுதி செயலாளர் அந்தோணி, பாளை பகுதி தலைவர் முருகன், மானூர் ஒன்றிய செயலாளர் சுத்தமல்லி மகாராஜன், பாளை ஒன்றிய செயலாளர் தருவை மகேஷ், மானூர் ஒன்றிய தலைவர் சீவல் பாண்டியன் மற்றும் சோனியா முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக மேலப்பாளையம் பகுதி செயலாளர் கருங்குளம் சிவா நன்றி கூறினார்.

Updated On: 9 April 2022 6:57 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!