/* */

காற்று காலத்தில் மின் விபத்துக்களை தவிர்க்க தலைமைப் பொறியாளர் வேண்டுகோள்

திருநெல்வேலி மண்டலம் தலைமைப் பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பாதுகாப்பு அறிவுரைகள் குறித்து தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

காற்று காலத்தில் மின் விபத்துக்களை தவிர்க்க தலைமைப் பொறியாளர் வேண்டுகோள்
X

தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் மின் விபத்துக்களை தவிர்க்க தலைமைப் பொறியாளர் பாதுகாப்பு அறிவுரைகள்

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருநெல்வேலி மண்டலம் தலைமைப் பொறியாளர் (பகிர்மானம்) கி.செல்வகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் மின் விபத்துக்களை, தவிர்க்கவும் பாதுகாப்பு அறிவுரைகள் குறித்து தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த இரண்டு நாட்களாக தென்மேற்கு பருவகாற்று காரணமாக திருநெல்வேலி மண்டலத்திற்குட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதுடன் ஒருசில இடங்களில் மழையும் பெய்து வருகிறது. பலத்த காற்று காரணமாக சில இடங்களில் மரங்கள் ஒடிந்து விழுந்து மின் தடை ஏற்பட்டு அவை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் மழை காரணமாக ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்க பொதுமக்களுக்கு கீழ்க்கண்ட பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

1. காற்று மற்றும் மழைக்காலங்களில் மின் கம்பங்கள், மின் கம்பிகள், மின் மாற்றிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். மேலும் மின்கம்பிகளுக்கு அடியில் நிற்பதையும் வாகனங்களை மின்கம்பிகளுக்கு அடியில் நிறுத்துவதையும் தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

2. மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. அது குறித்து அருகிலுள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பதோடு மின் வாரிய அலுவலர்கள் வரும்வரை வேறு யாரேனும் அந்த மின் கம்பிகளை தொடாமல் பார்த்துக்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

3. காற்று மற்றும் மழை காரணமாக மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகளில் விழுத்தால் பொதுமக்கள் தாமாக அதனை அகற்ற முயற்சி செய்ய வேண்டாம். மின் வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது

.4. மேல் நிலை மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரிய அலுவலர்களை அணுகவும். பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை

உடையதால் மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டும்பொழுது மரக்கிளைகள் மின் கம்பியில் பட்டு மரம் வெட்டும் நபருக்கு மின் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

5. மின் மாற்றிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் மின் கம்பங்கள் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும் போது அதன் அருகே செல்லக்கூடாது. அது குறித்து அருகிலுள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும்.

6. வீடுகள், மின் கம்பங்கள், மற்றும் மின் மாற்றிகளில் ஏற்படும் மின் பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரிசெய்ய முயற்சிக்கக் கூடாது. மின் வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மின்தடை நிவர்த்தி செய்ய 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையை பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

7. மழையின் போது வீடுகளில் உள்ள சுவர்களில் தண்ணீர் கசிவு இருக்குமாயின் அந்த பகுதியில் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்

8. மின் கம்பத்திற்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயர்களில் ஆடு, மாடுகளை கட்டுவதோ, மின் கம்பிகளுக்கு அடியி;ல் கால்நடைகளை கிடை அமர்த்துவதோ, மின்கம்பங்களை பந்தல் தூண்களாக பயன்படுத்துவதோ, மின்கம்பங்கள், ஸ்டே வயர்களில் மற்றும் சர்வீஸ் பைப்புகளில் கொடிகள் கட்டி துணிகளை காயப்போடுவதோ கூடாது.

9. விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பது சட்டப்படி குற்றமான செயலாகும், மேலும் மின்சார வேலி அமைப்பதனால் மனிதர்களுக்கும், கால் நடைகளுக்கும் மின் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படலாம். விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைத்தால் சம்பந்தப்பட்ட மின்இணைப்பு மின்துண்டிப்பு செய்யப்படும்.

10. பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளுக்கும் மின்னகம் - மின்நுகர்வோர் சேவை மையம் 9498794987 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். பொதுமக்கள் மேற்கூறிய வழிமுறைகளை கடைபிடித்து மின்சார விபத்துக்களை தடுப்பதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.





Updated On: 11 July 2021 2:49 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!