/* */

நெல்லையில் இயற்கை வழி வேளாண்மை, திறன் வளர்ப்பு பயிற்சி குறித்து கருத்தரங்கம்

பாரம்பரிய நெல் விதைகள், அரசு விதை பண்ணையில் உற்பத்தி செய்து வரும் ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் - ஆட்சியர் விஷ்ணு.

HIGHLIGHTS

நெல்லையில் இயற்கை வழி வேளாண்மை, திறன் வளர்ப்பு பயிற்சி குறித்து கருத்தரங்கம்
X

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இயற்கை வழி வேளாண்மை மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி குறித்து விவசாயிகள் உடனான கருத்தரங்கம் ஆட்சியர் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

இயற்கை வழி விவசாய கருத்தரங்கில் பாரம்பரிய நெல் விதைகள், அரசு விதை பண்ணையில் உற்பத்தி செய்து, வரும் ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தலைவர் வே.விஷ்ணு தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இயற்கை வழி வேளாண்மை மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி குறித்து விவசாயிகள் உடனான கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள் வேளாண்மை இணை இயக்குநர் இரா.கஜேந்திரபாண்டியன் முன்னிலையில் இன்று (11.12.2021) நடைபெற்றது.

கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:- இயற்கை வழி வேளாண்மை சாகுபடி செய்யும் முறை பற்றிய விழிப்புணர்வு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மூலம் ஏற்படுத்தப்படும், இயற்கை வழி விவசாயம் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை வட்டார அளவில் மற்றும் மாவட்ட அளவில் விற்பனை நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இணையதளம் மூலமாக இயற்கையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அனைத்து தொழில்நுட்பங்களும் கிடைக்க ஆவணம் செய்யப்படும். மாவட்ட அளவில் இயற்கை மற்றும் பாரம்பரிய முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளின் விபரங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழக அரசினால் பாரம்பரிய நெல் விதை உற்பத்தி திட்டத்தின் கீழ் நான்கு ரக பாரம்பரிய நெல் விதைகள் அரசு விதைப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டு, அடுத்த ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

கங்கை கொண்டான் மெகா உணவுப் பூங்காவில் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளின் விளை பொருட்களை விற்பனை செய்வதற்கான சிறப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். தூய பொருணை நாகரீகத்தில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உரித்தான பாரம்பரிய நெல் ரகங்களை சேர்ப்பதற்கு ஆவணம் செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தலைவர் வே.விஷ்ணு தெரிவித்தார்.

இயற்கை வழி வேளாண்மை என்பது இராசாயன உரம், பூச்சிக் கொல்லி, பூஞ்சாணக் கொல்லி, களைக் கொல்லி, வளர்ச்சியூக்கி, மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரினங்கள் போன்ற எந்த பொருளையும் பயன்படுத்தாமல் இயற்கை இடுபொருட்களை மட்டுமே பயன்படுத்தி மேற்கொள்ளப்படுவதே இயற்கை வேளாண்மையாகும். இயற்கை வேளாண்மை குறித்து தமிழ்நாட்டிலும் உலக அளவிலும் விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறையின் மூலம் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்துவதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் இரசாயன பொருட்களை தவிர்த்து சுற்றுச் சூழலை காக்கும் பயிர் சுழற்சி, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, பசுந்தாள் உரம், பண்ணைக்கழிவை பயன்படுத்துதல் போன்ற இயற்கை முறைகளை கடைபிடிக்க வேண்டும். மேலும் அவ்வாறு விளைப் பொருட்களின் அங்ககத் தன்மையை உறுதி செய்வதற்கு தமிழ்நாட்டில் அங்கக விளைப் பொருட்களுக்கு விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்றளிப்புத் துறையால் சான்றளிக்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 500 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் இயற்கை வழி விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று துறையால் 115 விவசாயிகளுக்கு இதுவரை அங்ககச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2812 ஏக்கர் பதிவு செய்யப்பட்டு 287.5 ஏக்கருக்கு அங்ககச் சான்றளிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை வழி வேளாண்மை கருத்தரங்கம், இயற்கை வழி வேளாண்மைக்கு அதிக ஊக்கமளித்து விவசாயிகளை அங்ககச் சான்றளிப்பு பெறுவதற்கும், தொழில்நுட்ப ஆலோசனை, அரசு திட்டங்கள், இயற்கை வேளாண்மை மேம்பாட்டு உத்திகள் மற்றும் எதிர் கொள்ளும் சவால்கள் குறித்த கருத்து பரிமாற்றம் நடைபெற்றது. அட்மா திட்டம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொழில்நுட்பங்கள் மற்றும் அங்கக சான்றளிப்பு பெறுவதற்கான தகுதி மற்றும் நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இயற்கை வழியில் தரமான விளை பொருட்களை உற்பத்தி செய்து அதிக அளவில் வருமானம் ஈட்டுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இக்கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அசோக்குமார், உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குநர் இரா. டேவிட் டென்னிசன், வேளாண்மை துணை இயக்குநர்கள் முனைவர்.சுந்தர் டேனியல் பாலஸ் (திட்டங்கள்) பாலசுப்பிரமணியன் (நுண்ணீர்பாசனம்) முருகானந்தம் (வேளாண் விற்பனை மற்றும் வணிகம்) வேளாண்மை செயற்பொறியாளர் ஜாகீர் உசேன், தோட்டக்கலை துணை இயக்குநர் சுபா வாசுகி, செல்வம் (பாசன மேலாண்மை பயிற்சி நிலைய பேராசிரியர்), விதைச்சான்று உதவி இயக்குநர் சுரேஷ், வேளாண்மை உதவி இயக்குநர் முக்கூடல், இரா.சுபசெல்வி, அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் அனைத்து வட்டார விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Dec 2021 12:12 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!