/* */

நெல்லையில் எம்ஜிஆர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை

தென் மாவட்டங்களில் ஆன்மீகச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட சசிகலா. நெல்லையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

HIGHLIGHTS

நெல்லையில் எம்ஜிஆர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை
X

நெல்லையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நெல்லையில் சசிகலா புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள V.K.சசிகலா இன்று காலை திருச்செந்தூரில் இருந்து நெல்லை வந்தார். கேடிசி நகரில் அவருக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் முழு உருவச்சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக நெல்லை வந்த சசிகலாவுக்கு அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பொன்னாடை அணிவித்தும், மாலை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து அவர் தென்காசி மாவட்டம் செல்கிறார். அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து விவாதங்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று திருச்செந்தூரில் தனியார் விடுதியில் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ராஜா திடீரென சசிகலாவை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பு தற்போதைய அரசியல் நகர்வின் முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது. மேலும் சசிகலா செல்லும் இடங்களில் எல்லாம் தொண்டர்கள் அதிமுக கட்சி கொடியுடன் அவரை வரவேற்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 5 March 2022 6:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?