/* */

பொதுமக்கள்,பெண்களுக்கு 'காவல் உதவி கைபேசி செயலி' விழிப்புணர்வு

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட காவல் உதவி கைபேசி செயலியை நெல்லை மாநகர காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

பொதுமக்கள்,பெண்களுக்கு காவல் உதவி  கைபேசி செயலி விழிப்புணர்வு
X

காவல் உதவி மொபைல் செயலி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்.

தமிழக காவல் துறையால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட காவல் உதவி என்ற 'கைபேசி செயலி' குறித்து திருநெல்வேலி டவுன், கடைவீதியில் பொது மக்கள் மற்றும் பெண்களுக்கு நெல்லை மாநகர காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் குமார் உத்தரவின் பேரில், நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்கள் T.P.சுரேஷ்குமார் கிழக்கு மற்றும் K.சுரேஷ்குமார் மேற்கு ஆகியோரின் மேற்பார்வையில், தமிழக காவல் துறையால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட காவல் உதவி என்ற 'கைபேசி செயலி'யை திருநெல்வேலி டவுன் ரத வீதியில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி, குழந்தை தடுப்பு பிரிவு (ACTU) காவல் ஆய்வாளர் ஜெகதா மற்றும் போலீசார் திருநெல்வேலி மாநகரம் டவுன் கடைவீதியில்இன்று (9ம் தேதி)', பொது மக்கள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இந்த கைபேசி செயலி மூலம் அவசர காலங்களில் பெண்கள் உடனடியாக புகார் அளிக்க உருவாக்கப்பட்டுள்ளது. காவல் உதவி என்ற புதிய செயலி 60க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியை Play store ல் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். கட்டுப்பாட்டு அறையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள இந்த செயலி மூலம் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருந்து புகார் அளிக்கலாம். புகைப்படங்கள் மூலமாகவோ, சிறிய அளவிலான வீடியோ வாயிலாகவும் காவல் உதவி செயலியில் புகார் அளிக்கலாம்.

காவல் நிலையங்களின் இருப்பிடம், நேரடி அழைப்பு எண் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி விபரம் உள்ளிட்டவைகள் செயலியில் இருக்கும். Location, பரிமாற்றம் வசதி, போக்குவரத்து விதிமீறல்கள், அபராதம் செலுத்தும் வசதி உள்ளிட்டவை கடும் காவல் உதவி செயலியில் உள்ளது.

Updated On: 10 April 2022 10:14 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  4. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  9. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  10. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...