/* */

நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா எப்போது ? வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!

Tirunelveli Therottam-நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா எப்போது துவங்குகிறது? ஆனித் திருவிழாவின் முக்கிய அம்சமான தேர்த்திருவிழா எப்போது நடைபெற உள்ளது உள்ளிட்ட தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

Tirunelveli Therottam
X

Tirunelveli Therottam

Tirunelveli Therottam

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா 2023 கோலாகலமாக வரும் ஜூன் 24ம் தேதி துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த திருவிழாவில் திருநெல்வேலி மாநகரம் மட்டுமின்றி, அருகாமையிலுள்ள கிராமங்கள், நகரங்கள், அருகிலுள்ள மாவட்ட மக்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்து இறைவன் அருள் பெற்றுச் செல்வார்கள்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் 2023 மிகச் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஆனித் திருவிழாவின் மிகச் சிறப்பான அம்சமே இந்த தேரோட்டம்தான். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் நான்கு ரத வீதிகளிலும் கூட்டம் அலைமோதும். தேரோட்டத்துக்கு முந்தைய தினம் வரையிலும் நான்கு ரத வீதிகளிலும் கடைகள் புதிது புதிதாக முளைக்கும். திருவிழாவுக்கு வந்த பக்தர்களுக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் அரசு சார்பில் மிகப் பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும்.

திருநெல்வேலி ஆனித் திருவிழா 2023 தேதி குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், வரும் ஜூன் 24ம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா துவங்க இருக்கிறது. அதிகாலை 5 மணிக்கு மேல் இந்த கொடியேற்றம் நடைபெறும். இதன்பிறகு உள்ளூர் ஆட்கள் வெளியூர் செல்லமாட்டார்கள் என்பது ஐதீகம்.

நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா 2023 தேதி | Nellaiappar Temple Aani Thiruvizha 2023 Date

திருநெல்வேலி மாநகரில் அமைந்துள்ள நெல்லையப்பர் திருக்கோவில் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே சிறப்பு பெற்ற ஒரு பழமையான திருத்தலம் இந்த நெல்லையப்பர் கோவில். ஐந்து அம்பலங்களில் ஒன்றான தாமிர அம்பலமாக இது திகழ்கிறது. இந்த கோவிலில் சிறப்பு வாய்ந்த ஆனித் திருவிழா வரும் ஜூன் 24ம் தேதி முதல் ஜூலை 3ம் தேதி வரை மொத்தம் 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

Tirunelveli Arulmighu Nellaiappar Swami, Arulmighu Gandhimathi Ambal - Aani Perunthiruvizha schedule is given பேளா-------

24 June 2023 - Saturday - Day 1

- Morning - Kodiyetram (Flag Hoisting)

- Night - 7 pm - Poongoil Chaparam

25 June 2023 - Sunday - Day 2 - Sabapathi Abhishekam

Morning - 8 am - Velli Chaparam

Night - 7 pm - Velli Karpaga Vruksham Vahanam, Velli Kamala Vahanam

26 June 2023 - Monday - Day 3

Morning - 8 am - Velli Karpaga Vruksham Vahanam, Velli Kamala Vaganam

Night - 7 pm - Thanga Bhootha Vahanam, Velli Simha Vahanam

27 June 2023 - Tuesday - Day 4

Morning - 8 am - Velli Guthirai Vahanam, Velli Kamadhenu Vaganam

Night - 7 pm - Velli Rishaba Vahanam

28 June 2023 - Wednesday - Day 5

Morning - 8 am - Velli Rishabha Vahanam

Night - 7 pm - Indira Vimanam

29 June 2023 - Thursday - Day 6

Morning - 8 am - Velli Chaparam

Night - 7 pm - Velli Chaparam

Velli Yanai Vahanam, Anna Vaganam

30 June 2023 - Friday - Day 7

Morning - 8 am - Nellaiappar Thanga Pallakku, Ambal Thavazhntha Thirukolam Muthu Pallakku

Night - 7 pm - Velli Guthirai Vahanam, Velli Kamadhenu Vaganam

- Swami Nataraja Peruman Thiruveethi Ula

1 July 2023 - Saturday - Day 8

Morning - 7.30 am Natarajar Vellai Saathi Utprakara Ula

Morning - 8 am Natarajar Pachai Saathi Thiruveethi Ula

Evening - 5 pm - Gangalanathar Thanga Chaparam

Night - 10 pm - Ther Kadaksham Veethi Ula, Thanga Kailasa Parvatham Vaganam, Thanga Kili Vahanam

2 July 2023 - Sunday - Day 9

- Therottam (Thiruther, Chariot)

- Sapthavarna Pallakku (After Therottam)

Day 10 - Theerthavari (the day after completion of Therottam)


தமிழில் விவரங்கள்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் சுவாமி, அருள்மிகு காந்திமதி அம்பாள் - ஆனி பெருந்திருவிழா அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

24 ஜூன் 2023 - சனி - நாள் 1

- காலை - கொடியேற்றம் (கொடி ஏற்றுதல்)

- இரவு - 7 மணி - பூங்கோயில் சப்பரம்

25 ஜூன் 2023 - ஞாயிறு - நாள் 2 - சபாபதி அபிஷேகம்

காலை - 8 மணி - வெள்ளி சப்பரம்

இரவு - 7 மணி - வெள்ளி கற்பக விருக்ஷம் வாகனம், வெள்ளி கமல வாகனம்

26 ஜூன் 2023 - திங்கள் - நாள் 3

காலை - 8 மணி - வெள்ளி கற்பக விருக்ஷம் வாகனம், வெள்ளி கமல வாகனம்

இரவு - 7 மணி - தங்க பூத வாகனம், வெள்ளி சிம்ம வாகனம்

27 ஜூன் 2023 - செவ்வாய் - நாள் 4

காலை - 8 மணி - வெள்ளி குதிரை வாகனம், வெள்ளி காமதேனு வாகனம்

இரவு - 7 மணி - வெள்ளி ரிஷப வாகனம்

28 ஜூன் 2023 - புதன் - நாள் 5

காலை - 8 மணி - வெள்ளி ரிஷப வாகனம்

இரவு - 7 மணி - இந்திரா விமானம்

29 ஜூன் 2023 - வியாழன் - நாள் 6

காலை - 8 மணி - வெள்ளி சப்பரம்

இரவு - 7 மணி - வெள்ளி சப்பரம்

வெள்ளி யானை வாகனம், அன்ன வாகனம்

30 ஜூன் 2023 - வெள்ளி - நாள் 7

காலை - 8 மணி - நெல்லையப்பர் தங்கப் பல்லக்கு, அம்பாள் தவழ்ந்த திருக்கோலம் முத்துப்பல்லக்கு.

இரவு - 7 மணி - வெள்ளி குதிரை வாகனம், வெள்ளி காமதேனு வாகனம்

- சுவாமி நடராஜப் பெருமான் திருவீதி உலா

1 ஜூலை 2023 - சனி - நாள் 8

காலை - 7.30 மணி நடராஜர் வெள்ளை சாத்தி உட்பிரகார உலா

காலை - 8 மணிக்கு நடராஜர் பச்சை சாத்தி திருவீதி உலா

மாலை - 5 மணி - கங்களாநாதர் தங்க சப்பரம்

இரவு - 10 மணி - தேர் கடாக்ஷம் வீதி உலா, தங்க கைலாச பர்வத வாகனம், தங்க கிளி வாகனம்.

2 ஜூலை 2023 - ஞாயிறு - நாள் 9

- தேரோட்டம் (திருத்தேர், தேர்)

- சப்தவர்ண பல்லக்கு (தேரோட்டத்திற்கு பின்)

நாள் 10 - தீர்த்தவாரி (தேரோட்டம் முடிந்த மறுநாள்)


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 17 Feb 2024 6:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு