/* */

புதுமைப்பித்தன் பிறந்தநாள் விழா: நெல்லையில் மாணவர்கள் மாலை அணிவித்து மரியாதை

மதிதா இந்து கல்லூரியில் புதுமைப்பித்தன் 117ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மாலை அணிவித்து மரியாதை.

HIGHLIGHTS

புதுமைப்பித்தன் பிறந்தநாள் விழா: நெல்லையில் மாணவர்கள் மாலை அணிவித்து மரியாதை
X

மதிதா இந்து கல்லூரியில் புதுமைப்பித்தன் 117ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் 117ஆவது பிறந்தநாள் விழா முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் 117வது பிறந்தநாள் விழா மகாகவி பாரதி படித்த வகுப்புறையான நாற்றங்காலில் வைத்து நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர்.சி.உலகநாதன் தலைமை தாங்கி புதுமைப்பித்தன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வந்திருந்தவர்களை பள்ளி ஓவிய ஆசிரியர்.மு. சொக்கலிங்கம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பாரதியார் உலக பொதுசேவை நிதியத்தின் பொதுச் செயலாளர் முனைவர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் கலந்து கொண்டு புதுமைப்பித்தன் சிறுகதை சிறப்புகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

வளர்தமிழ் மன்ற துணைச் செயலாளர் கவிஞர்.சு.முத்துசாமி வாழ்த்துரை வழங்கினார். மீனாட்சிபுரம் கிளை நூலகர் அகிலன் முத்துக்குமார் கலந்து கொண்டு புதுமைப்பித்தன் கதைகள் என்ற நூலை பள்ளி நூலகத்திற்கு வழங்கினார். நிகழ்வில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சோ.முருக முத்துராமன், ஆசிரியர்கள் கந்த முருகன், சிவசங்கரன் மற்றும் மாணவ- மாணவியர் பெரும் திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்.மு. சோமசுந்தரம் நன்றி உரையாற்றினார்.

Updated On: 27 April 2022 12:43 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  3. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  4. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  7. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  9. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!