/* */

நெல்லையில் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு பெறும் பணி தொடங்கியது

நெல்லையில் முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குப் பெறும் பணிகள் தொடங்கியது, 3403 பேர் வாக்களிக்க உள்ளனர்.

HIGHLIGHTS

நெல்லையில் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு பெறும் பணி தொடங்கியது
X

தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டமன்றப் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுவரை இல்லாத வகையில் இந்த தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பு வசதியாக அவர்களின் வீடுகளில் இருந்தபடியே தபால் வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

அந்தவகையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரனா நோயாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.இதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் ஆகியோர் அடங்கிய 109 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த சிறப்பு ஏற்பாட்டின் மூலம் மாவட்டம் முழுவதும் 3403 பேர் தபால் வாக்களிக்க தகுதியானவராக கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதையடுத்து திட்டமிட்டபடி இன்று நடமாடும் குழுவினர் ஏற்கனவே கண்டறியப்பட்ட முதியவர்கள் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு படிவத்தினை வழங்கினர்,

பின்னர் குடும்பத்தினர் உறவினர்கள் உள்பட யாருமில்லாத தனி அறையில் சம்பந்தப்பட்ட நபர்களை அடைத்து வைத்து தபால் வாக்கினை பதிவு செய்ய அதிகாரிகள் நேரம் வழங்கினர், படிவத்தினை பூர்த்தி செய்த பிறகு குழு அலுவலர்கள் அதை வாங்கி வாக்காளர் முன்னிலையே மூடி கவரிட்டு அதை வாக்கு பெட்டிக்குள் போட்டனர்.

தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுதினமும் தபால் வாக்குப் பதிவு பெறப்பட உள்ளது. வழக்கமாக ஒவ்வொரு பொதுத்தேர்தலிலும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மிகவும் சிரமத்துடன் வாகனங்களில் அமரவைத்தும் தோளில் சுமந்தபடியும் வாக்குச் சாவடிகளுக்கு அழைத்து சென்று வாக்களிக்க வைப்பார்கள்,

ஆனால் இந்த முறை அவர்களின் நலனுக்காக மிகவும் எளிய முறையில் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குப்பதிவு பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 30 March 2021 11:48 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  2. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  4. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  5. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  6. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  9. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’