/* */

கோவிட்-19 சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்: துவக்கி வைத்தார் மேயர்

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் இன்று காலை 142 இடங்களிலும், மதியம் 142 இடங்களிலும் ஆக மொத்தம் 284 இடங்களில் முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கோவிட்-19 சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்: துவக்கி வைத்தார் மேயர்
X

கோவிட்-19 சிறப்பு மெகா தடுப்பூசி முகாமினை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் துவக்கி வைத்தார்.

திருநெல்வேலி மாநகராட்சி நான்கு மண்டல பகுதிகளில் இன்று (08-05-22) கோவிட்-19 சிறப்பு மெகா தடுப்பூசி முகாமினை சந்திப்பு இரயில் நிலையத்தில் மேயர் பி.எம்.சரவணன் துவக்கி வைத்தார். உடன் துணைமேயர் கே.ஆர்.ராஜூ உள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்தரன் அறிவுரையின்படி, கோவிட்-19 சிறப்பு தடுப்பூசி முகாம் திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் இன்று காலை 142 இடங்களிலும், மதியம் 142 இடங்களிலும் ஆக மொத்தம் 284 இடங்களில் முகாம் நடைபெறுகிறது. மாநகர பகுதிகளில் 18 வயதிற்கு மேல் தகுதியுடைய 4 இலட்சம் பயனாளிகளில் இதுவரை முதல் தவணை 90 சதவீதம் பேரும், இரண்டு தவணையும் எடுத்தவர்கள் 70 சதவீதம் பேரும், 15 முதல் 17 வயது பள்ளி செல்லும் மாணாக்கர்களில் முதல் தவணை 98 சதவீதம் பேரும், இரண்டு தவணையும் எடுத்து கொண்டவர்கள் 65 சதவீதம் பேர் ஆவார்கள்,

இதில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் குறைவாக உள்ளனர். இரண்டாவது தவணை தடுப்பூசி மற்றும் ஊக்குவிப்பு (பூஸ்டர்) போடாமல் விடுபட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் இந்த சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் மாநகராட்சி 4 மண்டலங்களில் 130 நடமாடும் குழுக்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்த உள்ளனர். 12 நிலையான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசி பணியில் சுகாதார பணியாளர்கள் சுமார் 800 நபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இம்முகாமினை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி மேயர், துணைமேயர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில், மாநகர் நல அலுவலர் மரு.வி.ராஜேந்திரன், ஆணையாளர் (பொ) லெனின் மற்றும் எம்.வி.புரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மரு. சுமதி, சுகாதார ஆய்வாளர் பெருமாள், மற்றும், 'செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 May 2022 9:54 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!