/* */

நாட்டுக்கோழி உற்பத்தி பெருக்கம் குறித்த நூல்: நெல்லையில் அமைச்சர் வெளியீடு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாட்டுக்கோழி வளர்ப்பு, பாரம்பரியம் மாறாத கால்நடைகளை வளர்க்க ஊக்குவித்து வருகிறார்.

HIGHLIGHTS

நாட்டுக்கோழி உற்பத்தி பெருக்கம் குறித்த நூல்: நெல்லையில் அமைச்சர் வெளியீடு
X

இராமையன்பட்டி கால்நடை மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்து காெண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில் அறிவியல் தொழில் நுட்பத்தில் நாட்டுக்கோழி உற்பத்தி பெருக்கம் குறித்த நூலினை வெளியிட்டு நலத்திட்ட உதவிகளை மீன்வளம்- மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம், இராமையன்பட்டி, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வளாகத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் தேசிய நச்சுயிரி மற்றும் நுண்ணுயிரி சேகரிப்புத் திட்டம் பட்டியலின் மக்களுக்கான உபதிட்டம் மண்டல அளவிலான கால்நடை, கோழிகள் கண்காட்சி கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கண்காட்சியை பார்வையிட்டு, அறிவியல் தொழில்நுட்பத்தில் நாட்டுக்கோழி உற்பத்தி பெருக்கம் குறித்த நூலினை வெளியிட்டு நலத்திட்ட உதவிகளை மீன்வளம்- மீனவர்நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர். க.ந.செல்வக்குமார். திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வகாப் ஆகியோர் முன்னிலையில் இன்று வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மீன்வளம்-மீனவர்நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரம்பரியத்தை நாம் பாதுகாக்க வேண்டும் என நாட்டுக்கோழி வளர்ப்பு, பாரம்பரியம் மாறாத கால்நடைகளை வளர்க்க வேண்டும் என இத்திட்டங்களை ஊக்கவித்து வருகிறார். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என என்னி கால்நடைத்துறையின் மூலம் பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். சிறு சிறு பண்னைகளை உருவாக்கி கால்நடைகள் வளர்ப்பு மூலம் அதிக லாபம் ஈட்டும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கால்நடைகளுக்கான நோய் தடுப்பு நடவடிக்கையிலும், அனைத்து வகையான நோய்களையும், கட்டப்படுத்தும் மருந்துகள் நம்மிடம் உள்ளது. கோழிப்பண்னைகளை பெரிய அளவில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட அறிவியல் மைத்தில் கலர் மீண்களின் காட்சி அமைக்கபடவுள்ளது.

தமிழகத்தில் புது தில்லி இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் தேசிய நச்சுயிரி மற்றும் நுண்ணுயிரி மாதிரி சேகரிப்பு மையத்தின் பட்டியலின மக்களுக்கான உப திட்டம் 2020-21 இக்கல்லூரி கால்நடை மரபியல் மற்றும் இனவிருத்தித்துறையில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நாட்டின கால்நடைகள், கோழிகள் பற்றிய கண்காட்சி நேற்றும் இன்றும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 100 மாடு வளர்க்கும் பயனாளிகளுக்கு தலா 40 கிலோ மாட்டுத்தீவனமும், 100 ஆடு வளர்க்கும் பயனாளிகளுக்கு தலா 16 கிலோ ஆட்டுத் தீவனமும், 100 நாட்டுக்கோழி வளர்க்கும் பயனாளிகளுக்கு தலா 20 கிலோ தீவனம் ரூ.1.60 இலட்சம் மதிப்பிலும், 19 பயனாளிகளுக்கு கோழிக்கூடுகள் மற்றும் நாட்டுக்கோழி குஞ்சுகள் ரூ.1லட்சம் மதிப்பிலும் ஆக மொத்தம் ரூ.2.60 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 319 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

மேலும் வருங்கால சந்ததியர் அறிந்து கொள்ள நாட்டின கால்நடைகள், கோழிகள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ.மாணவியர்கள் கண்காட்சியை பார்த்து நமது பாரம்பரிய கால்நடைகளை பாதுகாக்க முன்வர வேண்டும். மீனவர்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம் அவர்களின் தொழில் மேம்பாட்டிற்காக அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் இந்த அரசு செய்து கொடுக்கும் மீனவ மக்களின் வாழ்வாதாரம் உயர் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். என மீன்வளம்-மீனவர்நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன், தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜீ, கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர் அ.பழனிசாமி, கால்நடை நலக்கல்வி இயக்குநர் முனைவர் சி.சௌந்தரராஜன், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தலைவர் கே.எஸ்.தங்கபாண்டியன், தேசிய நச்சுயிரி மற்றும் நுண்ணுயிரி சேகரிப்புத்திட்டம் பட்டியலின மக்கள் உபதிட்டம் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் முனைவர் தி.வ.மீனாம்பிகை, தேசிய நச்சுயிரி மற்றும் நுண்ணுயிரி சேகரிப்புத்திட்டம் பட்டியலின மக்கள் உபதிட்டம் ஒருங்கிணைப்பாளர், முனைவர்.த.ரவிமுருகன் இராமையன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் கு.டேவிட் மற்றும் அரசு அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Updated On: 30 April 2022 12:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  2. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  3. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  4. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  6. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  7. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  8. வீடியோ
    ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் |என்ன நடக்கிறது தமிழகத்தில்?#gold...
  9. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  10. வீடியோ
    🔴LIVE : சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ||...