/* */

நடிகர் விஜயின் பீஸ்ட் படம் இன்று ரிலீஸ்: கொண்டாட்டத்திற்கு போலீஸ் தடை

நெல்லையில் நடிகர் விஜயின் பீஸ்ட் படம் ரிலீஸ் கொண்டாட்டங்களுக்கு போலீஸ் திடீர் தடை மீறினால் நடவடிக்கை காவல்துறை எச்சரிக்கை.

HIGHLIGHTS

நடிகர் விஜயின் பீஸ்ட் படம் இன்று ரிலீஸ்: கொண்டாட்டத்திற்கு போலீஸ் தடை
X

திரையரங்குகள் முன்பு வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பேனர்.

நெல்லையில் நடிகர் விஜயின் பீஸ்ட் படம் ரிலீஸ் கொண்டாட்டங்களுக்கு போலீஸ் திடீர் தடை. கச்சேரி, கலை நிகழ்ச்சி நடத்த அனுமதியில்லை. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை எச்சரித்துள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம். டிரைலர் வெளியான போது ரசிகர்கள் திரையரங்கு ஒன்றில் ரகளையில் ஈடுபட்டதன் எதிரொலியாக போலீசார் அதிரடி காட்டியிருப்பதாக தகவல்.

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. எனவே ரிலீஸ் தேதி எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இன்று திட்டமிட்டபடி படம் வெளியாகிறது. அந்தவகையில் நெல்லை மாவட்டத்தில் மாநகரில் மொத்தம் 6 திரையரங்குகளில் பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாக உள்ள நிலையில், நெல்லையில் திடீரென பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் கொண்டாட்டத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

அதன்படி திரையரங்கிற்கு வெளியே வாகனங்கள் நிறுத்தவோ, பேனர்கள் வைக்கவும் போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும் இன்னிசை கச்சேரி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி இல்லை என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர காவல்துறை சார்பில் அனைத்து திரையரங்குகள் முன்பு அறிவிப்பு பேனர் வைத்துள்ளனர்.

கடந்த 2ம் தேதி பீஸ்ட் டிரைலர் வெளியான போது நெல்லை சந்திப்பு மதுரை சாலையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் டிரைலர் பார்த்த வேகத்தில் ரசிகர்கள் திரையரங்கின் இருக்கைகளை சேதப்படுத்தியும், கண்ணாடிகளை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாகவே நெல்லை மாநகரில் இன்று கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது முந்தைய நாள் இரவே திரையரங்கில் ரசிகர்கள் கச்சேரி, கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இதுபோன்ற நிலையில் நெல்லை மாநகரில் பீஸ்ட் திரைப்பட ரிலீஸ் கொண்டாட்டங்களுக்கு போலீசார் விதித்துள்ள இந்த திடீர் தடையால் விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Updated On: 13 April 2022 1:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்