/* */

வள்ளியூர் அருகே இருசக்கர வாகனம் விபத்து: இளைஞர் உயிரிழப்பு

வடலிவிளையில் நடக்கும் இலவட்டகல் தூக்கும் போட்டியில் 4 ஆண்டுகளாக முதலிடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

HIGHLIGHTS

வள்ளியூர் அருகே இருசக்கர வாகனம் விபத்து: இளைஞர் உயிரிழப்பு
X

வள்ளியூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த இளவட்ட கல் வீரர் தங்கராஜ்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள வடலிவிளையை சார்ந்த சன்னியாசி முத்து மகன் தங்கராஜ் (வயது 26). இவருக்கு கடந்த ஆண்டு திருமணமான நிலையில் வள்ளியூர் அருகே உள்ள ஒத்தக்கடையில் மனைவியுடன் குடியிருந்து வருகிறார். இவர் ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்டிக் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

மேலும் தங்கராஜ் வடலிவிளையில் நடைபெறும் பொங்கல் விழாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து 129 கிலோ எடையுள்ள இளவட்ட கல்லை தூக்கி இளவட்டக்கல் வீரர் எனும் பெயரும் வாங்கியுள்ளார். அதேபோன்று இந்த முறையும் அதை 129 கிலோ எடையுள்ள இளவட்டக் கல்லை தூக்கி வெற்றி பெற்றுள்ளார்.

இவர் நேற்று வடலிவிளையில் நடைபெற்ற நண்பரின் திருமண வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது வள்ளியூர் நம்பியான்விளை அருகே அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. அக்கம்பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலென்சுக்கு தகவல் தெரிவித்து விரைந்து வந்த 108 ஆம்புலென்ஸ் ஊழியர்கள் அவரது உடல் நிலை மோசமாக உள்ளதால் உடனடியாக இறந்து விடுவார் என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர் என்று கூறப்படுகிறது.

பின்னர் தங்கராஜின் நண்பர்கள் உயிர் இருப்பதை பார்த்து வேறு காரில் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் தங்கராஜ் இறந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வள்ளியூர் காவல் ஆய்வாளர் சாகுல்ஹமீது வழக்குப் பதிவு செய்து இடித்துச் சென்ற வாகனத்தை தேடி வருகிறார். மேலும் இளவட்ட கல் வீரர் விபத்தில் இறந்த சம்பவம் வடலிவிளை பகுதி மக்களை சொகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Updated On: 25 Feb 2022 10:17 AM GMT

Related News