/* */

மணிமண்டபங்களை செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் ஜெயசீலன் ஆய்வு

விடுதலைப் போராட்ட வீரர் மணி மண்டபங்கள் கட்டிடம் கட்டும் பணிகளை செய்தி துறை இயக்குனர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

மணிமண்டபங்களை செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் ஜெயசீலன் ஆய்வு
X
மணிமண்டபங்கள் கட்டுமான பணிகளை செய்தி துறை இயக்குனர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தில் 52 இலட்சம் மதிப்பில் நூலக கட்டிடம் கட்டும் பணிகள் மற்றும் கழிப்பிட கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மணிமண்டபத்தில் விடுதலை போராட்ட வீரர் ஒண்டி வீரன் வாழ்க்கை வரலாறு குறிப்புகள் மற்றும் புகைப்படங்கள் காட்சிப்படுத்துவது தொடர்பாகவும், மணிமண்டபத்தில் காலி இடங்களில் பூங்காக்கள் அமைத்து அழகுபடுத்துவதற்கும் அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து திருநெல்வேலி பொருட்காட்சி திடலில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்து வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மண்டபத்தை புனரமைக்கப்பட்டு வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறை இளைஞர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஒளி,ஒலி காட்சிமையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து இருப்பதால் அதற்கான இடம் மற்றும் வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் மணிமண்டபத்தில் அரசு போட்டித்தேர்வுக்காக படித்து வரும் இளைஞர்களிடம் மணி மண்டபத்திற்கும், போட்டித்தேர்வுக்காக பயிற்சி பெறுவதற்கும் அடிப்படை தேவைகள் ஏதாவது ஏற்படுத்தப்பட வேண்டுமா என கேட்டறிந்தார். மேலும் மணிமண்டபத்தில் நடைபெற்று வரும் பணிகள் விரைந்து முடிக்குமாறும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.ஜெய அருள்பதி, தூத்துக்குடி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயவீரபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 15 April 2022 11:54 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!