/* */

கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 பேர் கைது

மேலப்பாளையத்தில் போலீசார் வாகன சோதனையின் போது காரில் கடத்த முயன்ற ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் மற்றும் 3 பேர் கைது.

HIGHLIGHTS

கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 பேர் கைது
X

நெல்லை மேலப்பாளையம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு கடத்தி சென்ற ஒன்றரை டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நெல்லை மேலப்பாளையம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு எடுத்துச் செல்லப்பட இருந்த ஒன்றரை டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். குற்றவாளிகள் 3 பேர் கைது.

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மேலப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சாமி தலைமையிலான போலீசார் மேலப்பாளையம் அத்தியடி தெருவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த டாட்டா சுமோ கார் ஒன்றை மடக்கி சோதனையிட்ட போது உள்ளே பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நெல்லை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் காரை ஓட்டிவந்த பொட்டல் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன், பணகுடி பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் கார்த்திக் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து கார் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் இங்கிருந்து ரேஷன் அரிசியை வள்ளியூருக்கு எடுத்து சென்று பதுக்கி வைக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து நாகர்கோவில் வழியாக கேரள மாநிலத்தில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வது தெரிய வந்தது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் ஒன்றரை டன் ரேஷன் அரிசியும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Updated On: 26 Aug 2021 4:04 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!