/* */

அம்மா மினி கிளினிக் பணியாளர்களின் பணி நீக்கத்தை திரும்ப பெற கோரிக்கை

அம்மா மினி கிளினிக் பணியாளர்களை மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு பயன்படுத்த எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் ஐடியா

HIGHLIGHTS

அம்மா மினி கிளினிக் பணியாளர்களின் பணி நீக்கத்தை திரும்ப பெற கோரிக்கை
X

அம்மா மினி கிளினிக் பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் உத்தரவை திரும்பப் பெறவேண்டும். இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

கடந்த அதிமுக ஆட்சியின் நிறைவுப் பகுதியில் அம்மா மினி கிளினிக் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டது. இந்த மினி கிளினிக்கில், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதாரப் பணியாளர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அதன்படி 1820 மருத்துவர்களும், 1420 பன்நோக்கு மருத்துவ பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, அந்த திட்டத்தை கைவிடும் அறிவிப்புகள் எடுக்கப்பட்டன. அம்மா மினி கிளினிக் மூலம் மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனக்கூறி ஓராண்டு திட்டமாக துவங்கப்பட்ட அந்த திட்டத்தை மூடும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. முன்னதாக, இந்த திட்டம் துவங்கிய போது தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியதால், அம்மா மினி கிளினிக்கில் உள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். உயிரைப் பொருட்படுத்தாமல் அவர்கள் மேற்கொண்ட கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகள் சிறப்பானவையாக அமைந்திருந்தன.

இந்த சூழலில் மார்ச் 31-ஆம் தேதியுடன் அவர்களை பணி நீக்கம் செய்யும் தமிழக அரசின் ஆணை வெளியாகியுள்ளது. இந்த பணிநீக்க உத்தரவால் அவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்ட அதேவேளையில், அந்த திட்டத்திற்கு மாற்றாக, திமுக அரசு சார்பாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது. அந்த திட்டத்திற்கு அம்மா மினி கிளினிக்குகளில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை பயன்படுத்திக் கொள்வதன் மூலம், ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதோடு, ஏற்கனவே பெற்றுள்ள முன் அனுபவம் மூலம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடியும்.

மேலும், கொரோனா திரிபு அச்சம் இன்னும் முடிவடையாத சூழலிலும், மக்களின் மருத்துவத் தேவைகள் அதிகரித்துள்ள சூழலிலும், அனுபவம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை தக்கவைத்துக் கொள்வதே சிறந்ததாக இருக்கும்.

ஆகவே, தமிழக அரசு பணி நீக்க அரசாணையை திரும்பப்பெற்று, அம்மா மினி கிளிக்குகளில் பணி செய்த மருத்துவர்கள் மற்றும் பன்நோக்கு மருத்துவ பணியாளர்களை தொடர்ந்து பணி செய்யவும், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நிரந்தரம் செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Updated On: 24 March 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!