/* */

நெல்லையில் தனியார் பொறியியல் கல்லூரியின் 22ம் ஆண்டு விழா

வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியின் 22ம் ஆண்டு விழா. மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.

HIGHLIGHTS

நெல்லையில் தனியார் பொறியியல் கல்லூரியின் 22ம் ஆண்டு விழா
X

வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூயின் 22ம் ஆண்டுவிழா கோலாகலமாக நடைபெற்றது.

நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூயின் 22ம் ஆண்டுவிழா கோலாகலமாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக டிசிஎஸ் நிறுவன வேலைவாய்ப்புத் துறை உயரதிகாரி P.விக்னேஷ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ஸ்காட் கல்வி குழும நிறுவனர் S.கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கினார்.

பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி 22 வருடங்களாக பொதுமக்களின் பேராதரவுடன் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியின் 22ம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு ஸ்காட் கல்வி குழும நிறுவனர் முனைவர் S.கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கினார். ஸ்காட் கல்வி குழும துணைத் தலைவர் முனைவர் J.X.அமலி கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் C.அருண்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக டிசிஎஸ் நிறுவன வேலைவாய்ப்பு துறை தலைமை அதிகாரி P.விக்னேஷ் (தமிழ்நாடு & பாண்டிச்சேரி) கலந்துகொண்டு பேசினார். கல்லூரி முதல்வர் V.வேல்முருகன் ஆண்டறிக்கையையும், மாணவர்களின் சாதனைகளையும் பட்டியலிட்டு பேசினார். விஜய் டிவி புகழ் நடிகர் பாலா, விக்கி மற்றும் குறும்பட இயக்குநர் சுபாஷ் கல்யாண் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

விழாவில் பொதுமேலாளர்கள் முனைவர் K.ஜெயக்குமார், ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். அனைத்து துறைகளில் சாதனை. மாணவர்களுக்கும், அரசு நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லூரியில் சிறப்பாக பணியாற்றிய பேராசிரியர்களுக்கும், சிறந்த மாணவர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற்றன. இந்நிகழ்ச்சியை எம்.பி.ஏ. மாணவிகள் தீபலட்சுமி, தனிஷா மற்றும் ஸ்டெல்லா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். இந்த ஆண்டு விழா சிறப்புடன் நடைபெறுவதற்கு பெருமுயற்சி மேற்கொண்ட பொதுமேலாளர்கள் முனைவர் K.ஜெயக்குமார், S.கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் V.வேல்முருகன், வளாக மேலாளர் J.சகாரியா கேபிரியேல், வேலைவாய்ப்புத் துறை டீன் முனைவர் A.ஞான சரவணன், பயிற்சித்துறை டீன் முனைவர் S.பாலாஜி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோரை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் முனைவர் S.கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் c.அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.

Updated On: 19 Jun 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!