Begin typing your search above and press return to search.
நெல்லை-தமிழ்நாடு சிறப்பு காவலர்களுக்கான மருத்துவ முகாம்.
மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவலர்களுக்கான மூலிகை செடிகளின் விளக்கம், யோகா செயல்முறை பயிற்சி மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
HIGHLIGHTS

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் 9ஆம் ஆணி மற்றும் மாவட்ட சித்த மருத்துவ மையம் இணைந்து காவலர்களுக்கான சிறப்பு உடல் நல பரிசோதனை முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு சிறப்பு காவல் 9 ஆம் அணி மணிமுத்தாறு கவாத்து மைதானத்தில் , தமிழ்நாடு சிறப்பு காவல் 9ஆம் அணி தளவாய் ஏசு சந்திரபோஸ் தலைமையில் நடைபெற்ற முகாமில், ஹோமியோபதி, சித்த மருத்துவம், யோகா செயல்முறை விளக்கம், மருத்துவ குணமுடைய மூலிகை செடிகள், லேகியங்கள், மூச்சி பயிற்சி போன்றவை இடம் பெற்றிருந்தது.மேலும் 18வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வரும் உடல் உபாதைகளுக்கான சிறப்பு பரிசோதனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் 9ஆம் அணியினர் செய்திருந்தனர்.