/* */

திருச்சியில் 2 ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

திருச்சியில் கொலை வழக்கில் தொடர்புடைய 2 ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

HIGHLIGHTS

திருச்சியில் 2 ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
X

கடந்த 03.09.22-ம்தேதி பன்றி பிடிக்கும் வலை விற்பனைக்காக லாரியில் ஏற்றி வந்த உரிமையாளர் முத்துமணி என்பவர் அரியமங்கலம், திருச்சி - தஞ்சாவூர் பிரதான சாலையில் உள்ள டீ கடையில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த இருவர் முத்துமணியை ஆபாசமாக திட்டியும், கத்தியை காட்டி மிரட்டி பன்றி பிடிக்கும் வலையை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் எதிரிகள் முத்துக்குமார் (29) மற்றும் சரவணன் (23) ஆகியோரை கைது செய்தும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் எதிரிகள் முத்துக்குமார் மற்றும் சரவணன் ஆகியோர் மீது அரியமங்கலம் காவல் நிலையத்தில் தலா 2 கொலை வழக்கும், முன்விரோதம் காரணமாக பழிக்குபழி வாங்கும் எண்ணத்தில் சட்டவிரோதமாக வெடிகுண்டு தயாரித்து வைத்திருந்த வழக்கும் மற்றும் பொதுமக்களிடம் கத்தியை காண்பித்து பணம் பறித்த வழக்குகள் உட்பட தலா 5 வழக்குகள் அரியமங்கலம் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.

எனவே முத்துக்குமார் மற்றும் சரவணன் ஆகியோர் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுவதும், வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு, பொதுமக்களை அச்சுறுத்துபவர்கள் என விசாரணையில் தெரியவந்ததால் மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்பந்தபட்ட காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணை இன்று சார்வு செய்யப்பட்டது.

Updated On: 9 Sep 2022 2:37 PM GMT

Related News