/* */

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் தொடக்கம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டத்தை முதல் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் தொடக்கம்
X
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் தொடங்கப்பட்டதையொட்டி கலெக்டர் சிவராசு பக்தர்களுக்கு உணவு வழங்கினார்.

தமிழகத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில்,திருத்தணி முருகன் கோவில் ஆகிய மூன்று கோவில்களிலும் நாள் முழுவதும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இந்த அறிவிப்பின் படி இந்த மூன்று கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னையில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் தொடங்கி வைத்ததும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பக்தர்களுக்கு மதிய உணவினை வழங்கினார். இதேபோல தினமும் இந்த கோவிலில் காலை, மாலை, இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் உணவு வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாள் முழுவதும் அன்னதானம் திட்டத்தில் மதிய உணவு சாப்பிட்ட திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த பக்தர்கள் உணவை சாப்பிட்டு முடித்த பின் உணவு ருசியாக இருந்ததாக தெரிவித்தனர்.

Updated On: 16 Sep 2021 3:24 PM GMT

Related News