/* */

திருவாரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது

திருவாரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடங்கியபோது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்து வருகின்றனர்

HIGHLIGHTS

திருவாரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது
X

தமிழகம் முழுவதும் இன்றைய தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் மழையையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் பொறுமையாக நின்று வாக்களித்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகள் சேர்த்து மொத்தமாக 216 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 282 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இதில் 37 வாக்குசாவடிகள் பதற்றமான அடையாளம் காணப்பட்டுள்ளன.



திருவாரூர் மாவட்டத்தில் 1,07, 425 ஆண் வாக்காளர்களும்,1,17,662 பெண் வேட்பாளர்களும்,10 இதர வாக்காளர்கள் சேர்த்து மொத்தமாக 2,25,097 பேர் மொத்தமாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தல் பணியில் மொத்தமாக 1364 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 1200 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Updated On: 19 Feb 2022 4:50 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!