/* */

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்

அரசு பள்ளியில் மாணவியர் சேர்க்கை இன்று அதிகரித்திருக்கும் சூழ்நிலையில் அதற்கு ஏற்றார்போல் ஆசிரியர் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை.

HIGHLIGHTS

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்
X

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் பொதுச் செயலாளர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. 

திருவாரூர் அருகே புலிவலம் தனியார் அரங்கில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் பொதுச் செயலாளர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் மாநில தலைவராக ரவி தேர்ந்தெடுக்கப்பட்டார் தொடர்ந்து பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொதுச் செயலாளர் சண்முகநாதன் தெரிவித்ததாவது:

கடந்த 10 ஆண்டுகளாக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பல்வேறு வகையில் அலைகழிக்கப்பட்டனர். அவர்கள் பெற்ற வந்த சலுகைகளையும் உரிமைகளையும் இழந்தனர். இழந்த சலுகைகளையும் உரிமைகளையும் மீண்டும் பெறுவதற்காக பலகட்ட போராட்டங்களை நடத்தியும் கடந்த ஆட்சியில் இருந்தவர்கள் பேச்சு வார்த்தைக்கு கூட அழைக்கவில்லை. இவ்வாறு போராடிய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை பலி வாங்கியது கடந்த கால ஆட்சியாளர்கள். அவற்றையெல்லாம் விலக்கி தமிழகத்தின் தற்போதைய முதல்வர் புதிய உத்தரவிட்டிருக்கிறார்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில அமைப்பின் சார்பில் புதிய கல்விக் கொள்கை கருத்தரங்கம் புதுக்கோட்டையில் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என இந்த பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. அரசு பள்ளியில் மாணவியர் சேர்க்கை இன்று அதிகரித்திருக்கும் சூழ்நிலையில் அதற்கு ஏற்றார்போல் ஆசிரியர் எண்ணிக்கையை அரசு நியமிக்க வேண்டும் என்றார்.

Updated On: 27 Dec 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...