/* */

திருவாரூரில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்த 8 பேர் கைது

திருவாரூரில் ஆன்லைன் லாட்டரிகளை விற்பனை செய்த 8 பேர் கைது செய்து ரூ.12 லட்சம் ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

திருவாரூரில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்த  8 பேர் கைது
X
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கணினி மற்றும் பணம்.

தமிழக அரசால் தடை செய்யபட்ட வெளி மாநில ஆன்லைன் லாட்டரிகளை போலியாக தயாரித்து கணினி மூலம் பதிவிறக்கம் செய்து, தனியாக சாப்ட்வேர் தயார் செய்து வாட்ஸ்-அப் குழு அமைத்து பொதுமக்களை ஏமாற்றி மோசடியாக பணம் பறிக்கும் எண்ணத்தில் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய பல மாவட்டங்களில் விற்பனை செய்து வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் திருவாரூர் பெரிய மில் தெருவை சேர்ந்த சரவணன் (வயது 48), கொரடாச்சேரி வடக்குமாங்குடியை சேர்ந்த குமரேசன் (52), கூத்தாநல்லூர் வாழச்சேரியை சேர்ந்த விஜய்குமார் (35), மன்னார்குடி பைங்காநாடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் கண்ணா (32), கூத்தாநல்லூர் பொதக்குடியை சேர்ந்த மணிகண்டன் (30) மற்றும் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மீரான் (37), திருச்சி தொட்டியம் காட்டுபுத்தூரை சேர்ந்த சண்முகவேல் (27) மற்றும் ஒரு பெண் உள்பட 8 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டு கட்டுகள், ரூ.12 லட்சம் ரொக்க பணம்4 மடிக்கணினி, 14 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருவாரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 27 Dec 2021 6:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு