/* */

திருவாரூரில் புதிய வழித்தட பேருந்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

திருவாரூரில் இருந்து முத்துப்பேட்டை வழித்தடத்திலான புதிய பேருந்தை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருவாரூரில் புதிய வழித்தட பேருந்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
X

திருவாரூரில் புதிய பேருந்து வழித்தட சேவையை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சரின் ஆணைகிணங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி, பாண்டி, இடும்பாவனம், தில்லைவிளாகம், ஜாம்புவானோடை வழியாக முத்துப்பேட்டை வரை புதிய வழித்தடத்தில் செல்வதற்கான பேருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கரால் தொடங்கி வைக்கப்பட்டது.

இவ்வழித்தடத்தில் செல்லும் இப்பேருந்து நாள் ஒன்றுக்கு இரண்டு நடைகளும், அதேபோன்று இப்பேருந்தானது திருத்துறைப்பூண்டியிலிருந்து பாண்டி, எக்கல் வழியாக கடம்பவிளாகம் வரை நாள் ஒன்றுக்கு இரண்டு நடைகளும், திருத்துறைப்பூண்டியிலிருந்து கொற்கைக்கு பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்களின் நலன்கருதி ஒரு நடையும் இயக்கப்படுகிறது.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்,சட்ட மன்ற உறுப்பினர்பூண்டி கலைவாணன் ,மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (நாகப்படடினம் மண்டலம்)பொது மேலளர் மகேந்திரகுமார், துணை மேலாளர் (வணிகம்) சிதம்பரகுமார், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Dec 2021 6:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு