/* */

திருவாரூர்: ஆதரவற்ற விதவைகளுக்கு வெள்ளாடுகள் வழங்கல்

திருவாரூர் அருகே அம்மையப்பனில் ஆதரவற்ற விதவைகளுக்கு 100 சதவீத மானியத்தில் வெள்ளாடுகளை எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் வழங்கினார்.

HIGHLIGHTS

திருவாரூர்:  ஆதரவற்ற விதவைகளுக்கு வெள்ளாடுகள் வழங்கல்
X

அம்மையப்பன் கால்நடை மருந்தகத்தில் 100 பயனாளிகளுக்கு தலா 2,000 ரூபாய் மதிப்பிலான ஆடுகளை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் வழங்கினார்.

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் பெண்களை தொழில்முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் கீழ் ஆதரவற்ற, கணவனால் கைவிடப்பட்ட விதவைகளுக்கு 100% மானியத்தில் வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில் ஒன்றியத்துக்கு 100 பயனாளிகள் வீதம் மொத்தம் 1000 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக இன்று, திருவாரூர் அருகே அம்மையப்பன் கால்நடை மருந்தகத்தில் 100 பயனாளிகளுக்கு தலா 2,000 ரூபாய் மதிப்பிலான ஆடுகளை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் தனபால், கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்தர், வருவாய் கோட்டாட்சியர் பாலச்சந்திரன், வட்டாட்சியர் நக்கீரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 April 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்