/* */

மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் விவசாயிகள் முன்னனி ஆர்ப்பாட்டம்

ஜனவரி 31ஐ துரோக தினமாக அனுசரிப்பதாக கூறி மத்திய அரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

மத்திய அரசை கண்டித்து திருவாரூரில்  விவசாயிகள் முன்னனி ஆர்ப்பாட்டம்
X

திருவாரூரில் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டெல்லியில் புதிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடர் போராட்டத்தின் விளைவாக பிரதமர் மோடி மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக அறிவித்தார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கி அதனை சட்டமாக்க வேண்டும், போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்னும் போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், மின்சார சட்டம் 2020 ஐ வாபஸ் பெறவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசுக்கு முன் வைத்ததாகவும் அதற்கு மத்திய அரசு ஒப்புகொண்டதன் காரணமாக போராட்டத்தை கைவிட்டு தங்களது ஊர்களுக்கு திரும்பியதாகவும் ஆனால் இன்றுவரை இதில் ஒன்றைக் கூட மத்திய அரசு நிறைவேற்றவில்லை.

எனவே ஜனவரி 31ந் தேதி தேதியை துரோக தினமாக அனுசரிப்பதாக கூறி மத்திய அரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி இயக்கமான எஸ்.கே.எம்.சங்கத்தினர் அதன் மாவட்ட தலைவர் தம்புசாமி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Updated On: 31 Jan 2022 3:56 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்