/* */

திருவாரூர்: போலி டிராவல் ஏஜென்சி மீது பாதிக்கப்பட்டவர்கள் மோசடி புகார்

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இது தொடர்பாக மனு அளித்தும் இதுவகை நடவடிக்கையில்லை என கூறப்படுகிறது

HIGHLIGHTS

திருவாரூர்: போலி  டிராவல் ஏஜென்சி மீது பாதிக்கப்பட்டவர்கள் மோசடி புகார்
X

டிராவல் ஏஜென்சி மீது திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மோசடி  புகார் மனு அளித்த பாதிக்கப்பட்ட இளைஞர்கள்.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த டிராவல் ஏஜென்ஸி மீது, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

திருவாரூர் அருகே திருக்கண்ணமங்கை பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன். ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். அத்துடன் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், இவர்,சிவகங்கை மாவட்டம், அழகாபுரம் பகுதியை சேர்ந்த முத்தழகு, அவரது மனைவி மாதவி, இவரது சகோதரி திருச்சி தேவி, மாதவியின் மகள்கள் ஆகியோர் வாயிலாக வெளிநாடு அனுப்புவதற்காக, திருவாரூர், மணக்கால், அய்யம்பேட்டை கதிர்வேல், நாவுக்கரசு, ராஜேஷ்கண்ணா, சுவாமிமலை ஆனந்த் உள்ளிட்டோரிமிருந்து ரூ.12 லட்சம் பணம் வாங்கி, முத்தழகு தரப்பினரிடம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, முத்தழகு தரப்பினர், வெளிநாட்டு வேலைக்கான விசா அனுமதிக்கடிதத்தை கமலக்கண்ணனிடம் கொடுத்தனர். அவரும், தான் ஏற்பாடு செய்து வைத்திருந்த இளைஞர்களிடம் அதைக் கொடுத்துள்ளார். ஆனால், அந்த விசா அனுமதிக்கடிதத்தின் உண்மைத்தன்மையை விசாரித்தபோது, அவர்கள் வழங்கிய விசா, பணியாணை, விமான டிக்கெட் அனைத்தும் போலியானவை என தெரிய வந்தது. இதனால் ஏமாற்றமடைந்த கமலக்கண்ணன், பணத்தை திரும்பக்,கேட்டு முத்தழகு தரப்பினரை பலமுறை தொடர்பு கொண்டும் பலனில்லையாம். இதையடுத்து பணம் கொடுத்தவர்களும் கமலக்கண்ணனுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதுகுறித்து கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பாதிக்கப்பட்ட அனைவகும் சேர்ந்து புகார் மனு அளித்தனர்.ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மீண்டும் கமலக்கண்ணன் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர். ஏமாற்றியவரிடம் விசாரணை செய்து தங்களது பணத்தை தாமதமின்றி மீட்டுத்தர வேண்டுமெனபாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளளர்.





Updated On: 7 Sep 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...