/* */

மழையால் 200 ஏக்கர் சம்பா பயிர் சேதம்: திருவாரூர் விவசாயிகள் சோகம்

திருவாரூரில், நடவு செய்யப்பட்ட 200 ஏக்கர் சம்பா பயிர்கள், தண்ணீரில் மிதப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

மழையால் 200 ஏக்கர் சம்பா பயிர் சேதம்: திருவாரூர் விவசாயிகள் சோகம்
X

கிடாரங்கொண்டான் கிராமத்தில், நடவு செய்யப்பட்ட 200 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மிதப்பதை, கண்ணீருடம் காட்டும் விவசாயிகள்.

திருவாரூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துள்ளது. இதன் காரணமாக, திருவாரூர் அருகே கிடாரங்கொண்டான் கிராமத்தில், நடவு செய்யப்பட்ட 200 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள், தண்ணீரில் மிதக்க தொடங்கியுள்ளன. இது குறித்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் சிலர் கூறியதாவது:

கிடாரங்கொண்டான் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா நடவு செய்யப்பட்டுள்ளது. பத்து நாட்களாக பெய்துவரும் மழையால், விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால், நடவு செய்து பத்து நாட்களே ஆன இளம் சம்பா நெற்பயிர்கள் தற்போது மிதக்க தொடங்கிவிட்டன. கூட்டுறவு சங்கங்களில், கடன் கிடைக்காமல் நகைகளை அடகு வைத்து விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

தற்போது மழையால் பயிர்கள் மூழ்கி இருப்பதால், என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறோம். பாதிப்பு குறித்து இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில், எந்த அதிகாரியும் வந்து பார்வையிடவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பயிர் பாதிப்புகளை கணக்கீடு செய்து, தமிழக அரசிடம் இருந்து உரிய நிவாரணம் பெற்று தரவேண்டும். இது போன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் வடிகால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என்று கூறினர்.

Updated On: 12 Nov 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்