/* */

போராட்டம் நியாயமான போராட்டம் என்றால், முதல்வர் தடுக்க மாட்டார்: பூண்டி கலைவாணன்

திருவாரூரில் ஆசிரியர்கள் போராட்டக் காலம் பணி வரன்முறைபடுத்தி திருத்திய ஆணை வழங்கும் விழாவில் பூண்டி கலைவாணன் பேச்சு

HIGHLIGHTS

போராட்டம்  நியாயமான போராட்டம் என்றால், முதல்வர் தடுக்க மாட்டார்: பூண்டி கலைவாணன்
X

ஆசிரியர்கள் போராட்டக் காலம் பணி வரன்முறைபடுத்தி திருத்திய ஆணை வழங்கும் விழா

திருவாரூர் தனியார் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் தலைமையில் போராட்டக் காலம் பணி வரன்முறைபடுத்தி தேர்வு நிலை- சிறப்பு நிலை திருத்திய ஆணையை 198 நபர்களுக்கு வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் பங்கேற்று ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து பூண்டி கலைவாணன் பேசியபோது,

3 வேளாண் சட்டங்கள் புதிதாக கொண்டு வந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் ஒரு சூழல் ஏற்பட்ட போது ஒட்டு மொத்த இந்திய துணைக்கண்டமே போராட்டக்களத்தில் இறங்கியது. விவசாயிகள் பல நிலைகளில் உயிர் தியாகம் செய்து அந்த மூன்று சட்டங்களை எதிர்த்துப் போராடினார்கள். கடந்த காலத்தில் மூன்று வேளாண் சட்டங்கள் தவறு என்பதை சுட்டிக்காட்டிய போது யாரும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.

ஆனால் தமிழக முதல்வர், சட்ட மன்றத்திலேயே ஏகமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். பாரதப் பிரதமர் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றுள்ளார் .

இது எதற்கு குறிப்பிடுகின்றேன் என்றால் போராட்டம் என்பது நியாயமான நோக்கத்தில் இருந்தால் முதலமைச்சர் நிச்சயமாக அப்போராட்டத்தை ஒடுக்கவோ தடுக்கவோ முயற்சியை மேற்கொள்ள மாட்டார். உண்மையான நிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கு உரிய நியாயம் கிடைப்பதற்கு வழி வகுப்பார் என இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

Updated On: 20 Nov 2021 4:57 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்