/* */

ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள்

ஆபத்தை உணராமல் பேருந்து படியில் பயணம் செய்யும் மாணவர்கள்.அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

HIGHLIGHTS

ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டில்  பயணம் செய்யும் மாணவர்கள்
X

 மாணவர்கள் பேருந்துகளில் ஆபத்தை உணராமல் படியில் நின்றும் பக்கவாட்டு கம்பியை பிடித்து தொங்கியவாறு பயணம் செய்து வருகின்றனர்

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளது.

தற்போது மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் போதும் பள்ளி முடியும் போதும் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது... மேலும்.நன்னிலம் பேருந்து நிலையத்தில் மாணவ மாணவிகள் தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்திலும் முண்டியடித்து ஏறும் நிலை உள்ளது. மாணவர்கள் பேருந்துகளில் ஆபத்தை உணராமல் படியில் நின்றும் பக்கவாட்டு கம்பியை பிடித்து தொங்கியவாறு பயணம் செய்து வருகின்றனர்..

மாணவர்கள் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக பேருந்துகளில் ஏறி செல்கின்றனர். உயிருக்கு அபாயம் உள்ளதால், பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதுகுறித்து நன்னிலம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் செல். சரவணன் கூறியதாவது: பள்ளி நேரத்தில் சிறப்பு பேருந்து களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பேருந்து நேரத்தில் அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்கினால் மாணவர்கள் இலவசமாக பயணம் செய்ய முடியும். எனவே அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

Updated On: 25 Feb 2022 10:17 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  3. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  4. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  5. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  6. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  7. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  10. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!