/* */

ஆறு, குளங்களில் பொதுமக்கள் குளிக்கத்தடை: தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பரவலாக மழை பெய்வதால் நீர்நிலைகளில் நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் ஆறுகள், குளங்களில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

HIGHLIGHTS

ஆறு, குளங்களில் பொதுமக்கள்  குளிக்கத்தடை:  தேனி மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு
X

தேனி மாவட்டத்தில் வைகை அணை நிரம்பியதால் அணைக்கு வரும் உபரி நீர் முழுவதையும் அப்படியே வெளியேற்ற, அணையை இன்று திறந்து விட்ட ஆட்சியர் முரளிதரன் பொதுமக்கள், ஆறுகள், குளங்களில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தினார்.

தேனி மாவட்டத்தில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், முல்லை பெரியாறு அணை, சுருளியாறு, சுரங்கனாறு, சண்முகாநதி, கொட்டகுடி ஆறு, வராகநதி, மஞ்சளாறு, வைகை ஆறு என அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முல்லை பெரியாறு, வைகை அணைகள் நிரம்பி விட்டன. வைகை அணை நீர் மட்டம் 69 அடியை தாண்டியதால், அணைக்கு வரும் நீர் முழுவதையும் அப்படியே வெளியேற்ற ஆட்சியர் முரளிதரன் இன்று அணையை திறந்து விட்டார். அணையில் இருந்து விநாடிக்கு 900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இது குறித்து, ஆட்சியர் கூறியதாவது: அணைக்கு வரும் உபரி நீர் முழுக்க வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர் மட்டம் தொடர்ந்து, அறுபத்தி ஒன்பது அடியிலேயே பராமரிக்கப்படுகிறது. மாவட்டத்தில் பரவலாக மழை பெய்வதால் ஆறுகள், குளங்களில் அதிக நீர் வரத்து உள்ளது. நீர் நிலைகளில், எந்த நேரமும் நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் ஆறுகள், குளங்களில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். வாகனங்கள் கழுவக்கூடாது. கிராம நிர்வாக அலுவலர்கள் ஆறுகள், குளங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.


Updated On: 2 Aug 2021 3:21 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்